புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பாதியில் பரிதவிக்க விட்ட சுதா கொங்கரா.. சரியான தூண்டிலை போட்டு பாலா பிடித்த சுறா மீன்

ஒருவழியாக பிரச்சினைகள் தீர்ந்தது, ஷூட்டிங்கின் அடுத்த கட்டத்திற்கு இறங்கியுள்ளனர் பாலா மற்றும் சூர்யா. இந்தப் படத்திற்கு மீடியேட்டராக செயல்பட்டுக் கொண்டிருந்தார் சுதா கொங்கரா. இப்பொழுது அவர் சூரரை போற்று ஹிந்தி ரீமேக் எடுப்பதற்காக இந்த படத்தை பாதியில் விட்டு விட்டு சென்று விட்டார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு குறைவான நாட்கள் கால்சீட் கொடுத்த சூர்யா, படத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன மன சங்கடங்களால் நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே மீடியேட்டராய் , பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்த சுதா கொங்கரா இப்பொழுது விலகியதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாலா முழித்துக் கொண்டிருந்தார். பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு தரமான மனிதர் வேண்டுமென்று யோசித்து, பிரபல இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படம் இழுபறியில் இருக்கிறது, இப்பொழுதும் விட்டுவிடக்கூடாது என ஏஎல் விஜய்யை இந்த படத்திற்கு வந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து ஏஎல் விஜய்யும் படத்தில் இணைய இருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிக பிஸியாக இருக்கும் ஏஎல் விஜய் எந்த ஒரு பாகுபாடு பார்க்காமல் பாலாவுடன் இணைய  இருக்கிறார். இப்படத்தின் செட்டில் உள்ள அனைவரும்ரும் ஏஎல் விஜய்தான் சரியான தேர்வு என்று மறைமுகமாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால் மறுபுறம் சூர்யாதான் ஏஎல் விஜய்யை  மறைமுகமாக சிபாரிசு செய்துள்ளார் என்றும் ஒரு புரளியை பரப்பி வருகின்றனர். எது எப்படியோ இந்த படம் நல்லபடியாக பிரச்சனை இல்லாமல் முடிந்தால் சரி என்கிறார்கள் ரசிகர்கள்.

- Advertisement -

Trending News