வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரகுவரனை விட்டு பிரிய இவ்வளவு காரணமா.? பகிர் கிளப்பிய ரோகிணி

தனித்துவமான குரல் மற்றும் உயரமான தோற்றம் என வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்ததால் ஹீரோவாக நடித்து வந்த ரகுவரன் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அதுவும் ரஜினியின் பாட்ஷா படத்தில் இவரது மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலம்.

தமிழ்சினிமாவில் ரகுவரன் தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய திறமையை நிலைநாட்டி உள்ளார். இந்நிலையில் நடிகை ரோகிணியை ரகுவரன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரண்டு வருடங்களில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் பின்பு ஆறு வருடங்களில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

பிறகு தனியாக வாழ்ந்து வந்த ரகுவரன் கடந்த 2008ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக உயிரிழந்தார். அப்போது ரோகினி ரகுவரனை பற்றி சில உருக்கமான பதிவுகளை வெளியிட்டு இருந்தார். தற்போது ஒரு மேடைப் பேச்சில் பெண்களுக்கு எதிராக இருக்கும் சமூகத்தைப் பற்றி பேசியிருந்தார்.

அதாவது ஒரு பெண் குழந்தை வளரும்போதே கணவர் வீட்டுக்கு சென்றால் இந்த இந்த வேலைகள் செய்யவேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கான சுதந்திரம் எல்லா இடத்திலுமே மறுக்கப்படுகிறது. அதுவும் புகுந்த வீட்டில் நாலு சுவருக்குள் பல போராட்டங்களுக்கு பிறகு அந்தப் பெண் ஏதாவது ஒரு வார்த்தை பேசி விட்டால் அவனுடைய நிலை அவ்வளவுதான்.

அதன்பின்பு அந்தப் பெண்ணின் கேரக்டரை தப்பாக பேசும் உலகம் இது. மேலும் 90 சதவீத பெண்களுக்கு போன்று நடக்கிறது. நானும் இதே குடும்ப வன்முறையை சந்தித்துவிட்டு தான் வந்துள்ளேன். இதற்கு மேலும் என்னால் அங்கு வாழ முடியாது என்ற பிறகே இந்த முடிவு எடுத்து வெளியே வந்துள்ளேன் என ரோகிணி கூறியுள்ளார்.

மேலும் அந்த குடும்பத்தில் இருந்து வெளியேறிய பிறகும் இதை வெளியில் சொல்ல எனக்கு இத்தனை காலம் தேவைப்பட்டுள்ளது. பொருளாதார சுதந்திரம் உள்ள எனக்கு இவ்வளவு குடும்ப வன்முறையை சந்தித்துள்ளேன். ஆனால் பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லாத பெண்களின் நிலை என்னவாகும். இவ்வாறு பல கேள்விகளை ரோகிணி முன்வைத்துள்ளார்.

ரகுவரன் அதிகமாக மது அருந்தக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது தான். மேலும் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக பல விஷயங்களை மெனக்கெட்டு செய்யும் ரகுவரன் வீட்டிலும் அதே கதாபாத்திரம் போன்று நடந்து கொள்வாராம்.

பெருமாளும் ரகுவரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அதேபோன்று வீட்டிலும் நடந்து கொள்வதால் மிகப்பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. தற்போது ரகுவரன் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டதாக ரோகிணி அந்த நிகழ்ச்சியை பேசி பகிர் கிளப்பியுள்ளார்.

- Advertisement -

Trending News