புதன்கிழமை, நவம்பர் 27, 2024

வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தார்கள். தற்போது அவர்களின் கனவை நினைவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் அரச கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. புது முயற்சியாக இப்படத்தை சிங்கிள் சாட்டில் பார்த்திபன் எடுத்து முடித்துள்ளார்.

தன்னை கவர்ந்த எந்த படமாக இருந்தாலும் உடனே அவர்களை அழைத்த பாராட்டக்கூடியவர் ரஜினி. இதனால் இரவில் நிழல் படத்தை பார்த்துவிட்டு ரஜினி பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். மேலும் ரஜினி ஒரு வாழ்த்து மடலையும் கொடுத்திருந்தார். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரத்தை பற்றி ரஜினி கேட்டுள்ளார்.

அதாவது இது போன்ற வரலாற்று காவியத்தில் நடிக்க வேண்டும் என ரஜினிக்கு மிகுந்த ஆசை இருந்ததாம். 70 களின் பிற்பகுதியில் தான் ரஜினி தமிழை கற்றுக் கொண்டார். அப்போது நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த ரஜினி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையும் படித்துள்ளார்.

அதில் உள்ள வார்த்தைகளின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால் அவை எல்லாவற்றையும் கடந்து பொன்னியின் செல்வன் நாவலை ரஜினி படித்து முடித்துள்ளார். மேலும் ஒருமுறை இயக்குனர் இமயம் கே பாலசந்தர் ரஜினியிடம் உனக்குப் பிடித்த நூல் எது என்று கேட்டு இருந்தார்.

அதற்கு ரஜினி சற்றும் யோசிக்காமல் பொன்னியின் செல்வன் என்று கூறியிருந்தார். இதனால் பொன்னியின் செல்வன் படம் போன்று ஒரு அரசர்கள் படத்தில் நடித்து விட வேண்டும் என ரஜினிக்கு ஆசை இருந்தது. சந்திரமுகி படத்தில் கூட ரஜினி வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினிக்கு வாய்ப்பளிக்க மணிரத்னம் தவறிவிட்டார்.

- Advertisement -spot_img

Trending News