வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நடுரோட்டில் டிரெஸ்ஸை அவுத்து காட்டவா என கேட்ட ரேகா நாயர்.. பயில்வானுக்கு பதில் சொன்ன பார்த்திபன்

நேற்று முதலே பயில்வான் ரங்கநாதன் மற்றும் ரேகா நாயர் பற்றிய விஷயங்கள் தான் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யூடியூப் வீடியோக்கள் மூலம் நடிகைகளை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் பற்றியும் சில விஷயங்களை குறிப்பிட்டு மோசமாக பேசியிருந்தார்.

அதாவது ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில்  நடித்தது குறித்து பயில்வான் மிகவும் கேவலமாக பேசி இருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர் பயில்வான் வாக்கிங் செல்லும் நேரத்தில் அங்கு இவரும் வாக்கிங் போவது போல் சென்று அவரிடம் சண்டையிட்டார்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில் ரேகா நாயர் நான் என்ன உன் பொண்டாட்டியா இல்ல மகளா என்னை பற்றி நீ எப்படி பேசலாம், செருப்பு பிஞ்சிடும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஆக்ரோஷமாக சண்டையிட்டார். பதிலுக்கு பயில்வானும் பொது இடம் என்று கூட பாராமல் மிகவும் மோசமான வார்த்தைகளை உபயோகித்து ரேகா நாயரிடம் மல்லுக்கு நின்றார்.

அது மட்டுமல்லாமல் நீ இப்படி நடித்தால் நான் அப்படி தான் பேசுவேன் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ரேகா நாயர் படத்தில் அப்படி என்ன பார்த்தீர்கள், டிரஸ்ஸை அவுத்து காட்டவா என்று படுமோசமாக சண்டையிட்டார். அதன் பிறகு அங்கு சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர். ஆனாலும் விடாத ரேகா நாயர் பயில்வனை அடிக்க பாய்ந்தார். அப்போது பயில்வான் அவரை தடுத்து அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பயில்வானுக்கு எதிராக பல கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் பயில்வான் இந்த விவகாரத்தில் பார்த்திபனை வம்பிழுத்தும் பேசி இருக்கிறார். அதாவது இரவின் நிழல் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பார்த்திபன் தான் இது போன்று ரேகா நாயரை பேச சொன்னதாக கூறியிருக்கிறார்.

இதற்கு தற்போது பார்த்திபன் பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இப்படி ஒரு விஷயம் நடந்ததே எனக்கு தெரியாது. நான் சம்பந்தப்பட்ட நடிகையிடம் இது பற்றி பேசுகிறேன். அவரின் சார்பாக நான் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் பவி டீச்சருக்காக ஒரு முறை மன்னிப்பு கேட்டார். இப்போது மீண்டும் ரேகா நாயருக்காகவும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். போகிற போக்கை பார்த்தால் இந்த படத்திற்காக அவர் இன்னும் யாரிடம் எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ தெரியவில்லை.

தற்போது இந்த விஷயம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயில்வான் ரங்கநாதன் இதுபோன்று தரம் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பெண்களை பேசுவதற்கு எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரேகா நாயர் இப்படி பயில்வானுடன் நடுரோட்டில் சண்டை போட்டது கூட ஒரு யூடியூப் சேனலின் முன்னேற்பாடு தான் என்ற ஒரு பேச்சும் இப்போது நிலவி வருகிறது.

- Advertisement -

Trending News