செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தேசிய விருதுகளை வாங்கி குவித்த 3 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் மணிரத்னம்

ஒவ்வொரு வருடமும் இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை தீர்மானித்து தேசிய விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இது சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பார்க்க கூடிய விருதாகும்.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ இயக்குனர்கள், நடிகர்கள் தேசிய விருதுகளை வாங்கி நம்மை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். அதில் அதிக அளவு தேசிய விருதுகளை வாங்கி குவித்த மூன்று திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், குழந்தை நட்சத்திரம் கீர்த்தனா ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ஏராளமான பாராட்டுகளை பெற்றது. அதிலும் பேபி கீர்த்தனா இந்த படத்தில் அற்புதமாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், இசையமைப்பாளர், எடிட்டிங், பாடலாசிரியர், ஆடியோகிராபி ஆகியவற்றின் அடிப்படையில் இப்படம் 6 விருதுகளை தட்டி சென்றது.

ஆடுகளம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படம் ஆறு தேசிய விருதுகளை பெற்றது. அதன் அடிப்படையில் சிறந்த நடிகர், இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், நடனம் மற்றும் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது.

சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் இந்த படத்திற்கு தற்போது ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை போன்ற பிரிவுகளின் கீழ் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது. இதனால் படகுழுவினர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Trending News