பெரிய 2 நடிகர்களுக்கு வலைவிரித்து ஏ ஆர் முருகதாஸ்.. அப்புறம் என்ன 1000 கோடி கன்ஃபார்ம்

சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்க கூடியவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற வெற்றி படங்களை ஏ ஆர் முருகதாஸ் கொடுத்துள்ளார். கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இதனால் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் தளபதி 65 படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நெல்சன் திலீப்குமார் விஜய்யின் 65 வது படத்தை இயக்கியிருந்தார்.

ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக யார் படத்தை இயக்கயுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது பாலிவுட் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கயுள்ளார். தமிழில் சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்திருந்தார் முருகதாஸ்.

இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமான இவர் அதன் பிறகு துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து இருந்தார். தற்போது மீண்டும் பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதாவது டபுள் ஹீரோ சப்ஜெக்டை வைத்து பாலிவுட்டில் களமிறங்கயுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் சல்மான்கானை வைத்து புது முயற்சியாக முருகதாஸ் ஒரு படத்தை இயக்கயுள்ளார். அதிலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த உறுதியான தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் பாலிவுட்டில் மூன்று கான்களையும் இயக்கிய ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமை மட்டுமல்லாமல் ஆயிரம் கோடியை தாண்டி கண்டிப்பாக வசூல் சாதனை படைப்பார் முருகதாஸ். மேலும் தற்போது அட்லியும் முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து படம் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.