வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லிப் லாக் கிஸ் அடித்த யாஷிகா.. எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப இந்த புகைப்படம் தேவையா!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் கூட கவர்ச்சியாக உடை அணிந்து வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அளவுக்கு அதிகமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதாவது யாஷிகா அந்த போட்டோவில் தன்னுடைய தோழிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ளார். அந்த தோழி வேறு யாரும் அல்ல சமீபத்தில் யாஷிகா மிகப்பெரிய விபத்தில் சிக்கிய போது எதிர்பாராத விதமாக உயிரிழந்த அந்த பெண் தான்.

அந்த நினைவுகளை பகிர்ந்துள்ள, யாஷிகா எங்களின் முழுமையற்ற கதை, மீண்டும் சந்திக்கும் வரை மிஸ் யூ பூ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எப்போதும் என் பிரார்த்தனைகளிலும், எண்ணங்களிலும், நினைவுகளிலும் நீ தான் இருக்கிறாய். அனைத்து புன்னகையுடன் முடிந்த இரவு என்று குறிப்பிட்டுள்ளார்.

yaashika anand
yaashika anand

இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுடைய அஜாக்கிரதையால் மட்டும் தான் உங்கள் தோழியின் உயிர் போனது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். இனிமேலாவது திருந்துங்கள் என்று யாஷிகாவை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அந்த பேரிழப்பிற்கு பின் யாஷிகா நிறைய முறை மீடியாவில் தன்னுடைய வருத்தத்தையும், குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் குடிபோதையில் கண்மண் தெரியாமல் கார் ஓட்டி நடந்த அந்த விபத்தில் அநியாயமாக ஒரு பெண் உயிரிழந்து விட்டார்.

yaashika anand
yaashika anand

இதற்கு யாஷிகா தான் முழு காரணம் என்று சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது இந்த போட்டோ எதற்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News