யதார்த்தமான திரைக்கதையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விக்ரம், சூர்யாவை தவிர இதுவரை விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியது கிடையாது.
அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தும் கூட அது நிறைவேறாமல் போனது. அதன் பிறகு பாலா, ஆர்யா, அதர்வா போன்ற ஹீரோக்களை வைத்து தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஏன் விஜய்யை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமான ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. என்னவென்றால் விஜய் இப்போதைய தமிழ் சினிமாவில் எட்டாத உயரத்தில் இருந்து வருகிறார். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கும் அவர் என்றைக்குமே அதை விட்டுக் கொடுக்க மாட்டார்.
அதேபோன்று பாலாவும் ஒரு மாதிரியான கறார் பேர்வழி. அவர் ஒரு படத்தை எடுக்கிறார் என்றால் அந்த படம் கிட்டத்தட்ட 2, 3 வருடங்கள் கூட இழுத்து விடும். அது மட்டுமல்லாமல் அவருடைய திரைக்கதையில் ஹீரோக்களும் எதார்த்தமான மனிதர்களாகவே காட்டப்படுவார்கள்.
ஹீரோயிசம் என்பது பெரும்பாலும் அவர் படத்தில் இருக்காது. மேலும் அவர் படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால் அது முடியும் வரை அந்த நடிகர் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு ஹீரோக்களின் தோற்றத்தையே அவர் மாற்றி விடுவார்.
இப்படி இரு வேறு துருவங்களாக இருக்கும் அவர்கள் இருவரும் ஜெல் ஆவது ரொம்பவும் கஷ்டம். அதனால்தான் பாலா பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது கிடையாது. அது மட்டுமல்லாமல் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இவர் படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை.