தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் தற்போது வில்லன் அவதாரத்திலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் விஜய் சேதுபதிக்கு தற்போது வில்லன் கேரக்டர்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இவரை வில்லனாக வைத்து படம் தயாரிக்க பல தெலுங்கு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். அதேபோன்று எஸ் ஜே சூர்யாவிற்கும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் அணுகும் தயாரிப்பாளர்கள் தற்போது தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இவர்கள் இருவரும் தற்போது அவர்களுக்கு திரையுலகில் இருக்கும் மவுசை பார்த்து தங்கள் சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டார்களாம்.
அந்த வகையில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 16 கோடி சம்பளமாக கேட்கிறாராம். எஸ் ஜே சூர்யா நெகடிவ் கதாபாத்திரத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை எதிர்பார்க்காத தெலுங்கு தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் ஹீரோக்களே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களாம்.
ஏனென்றால் தெலுங்கு திரையுலகை பொருத்தவரை அங்கிருக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் தமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவு தான். அப்படி இருக்கும்போது தமிழ் நடிகர்கள் கேட்கும் அவ்வளவு சம்பளத்தை தெலுங்கு தயாரிப்பாளர்களால் நிச்சயம் கொடுக்க முடியாது.
இதனாலேயே இவர்களை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் தற்போது பெருத்த ஏமாற்றத்தில் இருக்கின்றனர். ஆனாலும் சில பெரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.