வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் களமிறங்கும் ஹாலிவுட் ஹீரோ.. அட்ராசக்க!

தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்தவர் சந்திரபாபு.  இவர் தன்னுடைய தனித்துவமான காமெடியால் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்திருந்தாலும் தற்போது வரை அவருடைய இடம் நிரப்பப்படாமல் உள்ளது. மிகப்பெரிய நடிகர் எம்ஜிஆர் காலத்தில், நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய வரவேற்பை பெற்றன.

அப்போது எம்ஜிஆருக்கு இணையாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகிறான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’  போன்ற உணர்ச்சி மிகுந்த பாடல்களை பாடியவர்.

இவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது  படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சந்திரபாபு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இருவரின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகையால் தனுஷ் சரியான தேர்வு தான்.

தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உலக அளவில் புகழ் பெற்றுள்ளார். அதனால் அடுத்ததாக சந்திரபாபு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் படம் உலக அளவில் பிரபலம் அடையும் என கூறி வருகின்றனர்.

மேலும் சந்திரபாபு நடிப்பில் அசத்துவார். அதேபோல் தனுஷூம் நடிப்பில் அசத்த கூடியவர் என்பதால் தனுஷால் மட்டும்தான் சந்திரபாபு போல நடிக்க முடியும் எனக் கூறி வருகின்றனர். இதனால் ரசிகர்களும் இந்தப் படத்தை குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News