சூர்யா தமிழ் சினிமாவிற்கு நுழைந்தபோது ஏதும் தெரியாமல் அனைவரும் கிண்டல் பண்ணும் விதத்தில் அவரது நடிப்பும், அவரது நடனம், நடை, உடை அனைத்திலும் மக்களால் கலாய்க்க பட்டவர். இயக்குனர் வசந்த் மூலம் கதாநாயகனாக நடித்தார்.
நேருக்குநேர் படப்பிடிப்பில் மதிய இடைவெளியில் பிரியாணி விரும்பி சாப்பிட்ட சூர்யா இயக்குனர் வசந்த்திடம் பிரியாணி நல்லா இருக்கு சார் வாங்க சாப்பிடலாம் என்று எதார்த்தமாக கூப்பிட இயக்குனர் வசந்த் கோபப்பட்டு சூர்யாவை பார்த்து நீ பிரியாணி இங்கதாண்டா திங்க தெரியும் உனக்கெல்லாம் நடிப்பு எல்லாம் சுத்தமா வராது நீ அதையே தின்னு என்று அசிங்கப் படுத்தி விட்டு சென்றார்.
பின்னர் இதனை மனதில் வைத்து ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து அதை ஆர்வமாக கத்துக்கிட்ட சூர்யா ஒவ்வொரு படங்களிலும் பல வித்தியாசங்களை கொடுத்து வந்தார். இப்படி இருந்த சூர்யா இன்று தேசிய விருது வாங்கி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்.
இவர் பல வருடங்களுக்கு முன்பே அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி பல மாணவர்களை படிப்பிற்கு உதவிகளை செய்து வருகிறார் அதிலும் வெற்றி பெற்றார். பின்னர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதில் பல புதுமுக இயக்குனர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார் அதிலும் வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமாவை காதலித்த சூர்யா புதிதாக 5 திரையரங்குகளை லீசுக்கு வாங்கி நடத்தப் போகிறார். அதில் வெற்றி பெற்ற பிறகு மாவட்டங்கள் தோறும் பல திரையரங்குகளை தொடங்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்ற உணர்வை அறிய மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். வினியோகஸ்தர்களின் வலியையும் அறிய முடியும்.
பல நடிகர்கள் மற்ற மாநிலங்களில் திரையரங்குகள் வைத்திருக்கிறார்கள். நமது நடிகர்கள் மட்டும் இதுவரை இதுபோல் பண்ணவில்லை இப்பொழுது சூர்யா இறங்கியிருக்கிறார். பல சமூக கருத்துக்களை தைரியமாக கூறிய சூர்யாவிற்கு மேலும் மேலும் பல வெற்றிகளை குவிப்பார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.