நெட்ப்ளிக்ஸ் மீது கடும் கோபத்தில் ராஜமௌலி.. பலகோடி நஷ்டத்திற்கு இதான் காரணம்

பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஐ வைத்த ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொருமுறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன்பின்பு ஒருவழியாக படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இப்படம் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியானது.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னதாக பாகுபலி படமும் ஆயிரம் கோடி வசூல் ஈட்டி இருந்தது. இவ்வாறு ராஜமௌலியின் படங்கள் தொடர்ந்து ஆயிரம் கோடி வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் உடன் நடைபெற்ற உரையாடலில் ராஜமௌலி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நெட்பிளிக்ஸ் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டி இருந்தார். அதாவது ஆர் ஆர் ஆர் படத்தின் ஹிந்தி பதிப்பை மட்டும் நெட்பிளிக்ஸ் வாங்கி இருந்தது.

ஆனால் மற்ற 4 மொழி பதிப்புகளையும் நெட்பிளிக்ஸ் வாங்காததால் அந்நிறுவனம் மீது கோபம் இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருந்தார். ஹிந்தி மொழியில் இப்படம் அதிக வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற மொழி பதிப்புகளையும் வாங்கியிருந்தால் படத்தின் வசூல் அதிகரித்திருக்கும்.

மேலும் மேற்கிந்திய நாட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய படம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஐக்கிய அரபு நாடுகளில் ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதற்கு காரணமும் நெட்பிளிக்ஸ் தான். இதனால் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதாக அந்த பேட்டியில் ராஜமௌலி கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →