ஜிகிர்தண்டா 2 அசால்ட் சேதுவாக நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. மரண அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அதாவது இப்படத்தில் சித்தார்த் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் உள்ளார். இதனால் ஒரு ரவுடியின் கதையைப் படமாக்க ஆசைப்படுகிறார். அப்போது மதுரையில் பயங்கர தீவிரவாதியான அசால்ட் சேதுவின் வாழ்க்கை படமாக்க வேண்டும் என்று நினைக்கிறார் சித்தார்த்.

அப்போது சேதுவுக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இப்படத்தில் நடிக்கிறார். கடைசி நேரத்தில் சேதுவிடம் சித்தார்த் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தனது நண்பர் கருணாகரன் உதவியுடன் சித்தார்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே ஜிகர்தண்டா படத்தின் கதை.

இப்படத்தில் பாபி சிம்ஹாவின் அசால்ட் சேது கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. அது மட்டுமன்றி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படத்திற்காக பாபிசிம்ஹா பெற்றிருந்தார். மேலும் இப்படத்தில் சித்தார்த்தை விட வில்லனாக இருக்கும் பாபி சிம்ஹா தான் படத்தில் ஸ்கோர் செய்திருந்தார்.

மேலும் ஜிகர்தண்டா படத்தில் பல சுவாரஸ்யமான திருப்பங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இதனால் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் சந்தோஷ்  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.  5 ஸ்டார் கிரியேஷன் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் புரோடக்சன் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்கான முதற்கட்ட பணி தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் ஜிகர்தண்டா 2 படத்தில் மீண்டும் அசால்ட் சேதுவைத் பார்க்க வேண்டும் என ஆர்ப்பரிக்கின்றனர். இதற்கான கதையை எழுதி வருவதாகவும் அசால்ட் சேதுவாக விஜய் சேதுபதி அல்லது ராகவா லாரன்ஸ் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.