பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் முதலில் சூப்பர் ஸ்டாரை தான் நடிக்க வைக்க வாசு திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஜினி இந்த படத்தில் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக அவரிடமே கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டாரின் இந்த முடிவுக்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகின்றது.
அதாவது மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற மணிசித்திரதாழ் என்ற படத்தை தான் பி வாசு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சௌந்தர்யா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் ஜோதிகா நடித்திருந்தார்.
திறமையான நடிகையான சௌந்தர்யா இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சௌந்தர்யா ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் மாதம் ஆப்தமித்ரா படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
அதே போன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆப்தரக்க்ஷகா என்ற பெயரில் எடுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அதாவது கடந்த 2009 டிசம்பர் மாதம் விஷ்ணுவர்த்தன் உயிரிழந்தார். அவர் இறந்த பிறகுதான் இந்த படம் வெளியானது.
இதை மனதில் வைத்து தான் சூப்பர் ஸ்டார் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்படி படம் வெளியாவதற்கு முன்பே இரண்டு நட்சத்திரங்கள் உயிரிழந்தது அப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா என்ற ரேஞ்சில் அப்போது விவாதங்களும் எழுந்தது. அந்த வகையில் சந்திரமுகி 2 சூப்பர் ஸ்டாருக்கு உயிர் பயத்தை காட்டிவிட்டது.