கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் கோலிவுட்டில் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என வெறிகொண்டு காத்திருக்கிறார்.
இதற்காக அதிக கவனம் செலுத்திய தனுஷ், செல்வராகவன் இயக்கிய நானே வருவேன், மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி போன்ற மூன்று படங்களை நடித்து முடித்திருப்பதால், அவை அடுத்தடுத்த வரிசையாக ரிலீஸாகிறது.
இதில் திருச்சிற்றம்பலத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்தப் படம் இந்த மாதம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்து சாணிக்காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார்.
இந்த படத்தை 30-களில் உருவான படமாக எடுக்கப்போகின்றனர். இதற்காக தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் படத்திற்கான செட் போடப்பட்டு, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நான்கு மாதங்கள் படத்தின் படப்பிடிப்பை தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நான்கு மாதம் முழுவதும் தனுஷ் வேறு எந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என இயக்குனர் தனுஷுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார்.
இதனால் பிற மொழிகளில் படு பிஸியாக இருக்கும் தனுஷ் இந்த நான்கு மாதங்களில் கேப்டன் மில்லர் படத்தில் வெவ்வேறு கெட்டப்பில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறாராம். அதே நேரம் தனுஷ் நடித்து வைத்திருக்கும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற மூன்று படங்களையும் அடுத்தடுத்த வரிசையாக ரிலீஸ் செய்து ரவுண்ட் கட்டப் போகிறார்.