சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் பலரும் இப்போது தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமைகளை பற்றி தைரியமாக வெளியில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி இருந்த போதிலும் இந்த பிரச்சனைக்கு மட்டும் இன்னும் முடிவு கிடைக்காமல் இருக்கிறது.
அந்த வகையில் சீரியல் நடிகை ஜீவிதா தற்போது பகீர் கிளப்பும் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது அவருக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அப்போது அந்த படத்தின் இயக்குனர் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் எப்படி உடையிலா அல்லது நெருக்கமான காட்சிகள் இருக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் உங்கள் ரூமுக்கு நான், ப்ரொடியூசர், கேமராமேன், ஹீரோ என்று எல்லோரும் அடுத்தடுத்து வருவோம் என்று கூறியிருக்கிறார்.
இதனால் பதறிப் போன ஜீவிதா அந்த வாய்ப்பே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடி இருக்கிறார். இந்த விஷயத்தை பற்றி தற்போது வெளிப்படையாக பேசியிருக்கும் அவர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு பெண்களை இப்படி கேவலமாக பார்ப்பது வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு இங்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. அதிலும் நடிகை என்றால் அவர் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு கருத்து இப்போது நிலவுகிறது. அதனால் தான் தைரியமாக இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்யுங்கள் என்று கேட்கிறார்கள்.
ஆனால் நடிகைகள் இதற்கு பயப்படாமல் தைரியமாக நோ சொல்ல வேண்டும் என்று அவர் தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். இப்படி படத்தின் ஒட்டு மொத்த டீமும் ஒரு நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட செய்தி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.