திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

தமிழில் தொடர்கதைகளாக வந்த இரண்டே படங்கள்.. மூன்று தலைமுறை நடிகருடன் அசத்திய விஜய்

தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் சில படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஒன்ஸ்மோர் –  1997 இல் வெளிவந்த இந்த படத்தில் சிவாஜி, விஜய், சரோஜாதேவி, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கதைப்படி சிவாஜியை அப்பாவாக தத்தெடுக்கும் விஜய் அவருடைய ஒரு பிரச்சனையை தீர்த்து வைப்பார்.

அதாவது பல வருடங்களுக்கு முன் பிரிந்து சென்ற அவரின் மனைவி சரோஜா தேவி மீண்டும் சிவாஜியுடன் சேர்வது தான் படத்தின் கதை. 1963ல் வெளிவந்த இருவர் உள்ளம் என்ற படத்தின் தொடர்கதை தான் இது. அந்த படத்தில் சிவாஜி செல்வம் என்ற கதாபாத்திரம்திலும், சரோஜாதேவி சாந்தா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள்.

அந்த கதை கருவை மையப்படுத்தி தான் ஒன்ஸ்மோர் படம் உருவானது. எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் இருவர் உள்ளம் படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய், சிம்ரன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

அவசர போலீஸ் 100 –  பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இதில் கௌதமி, சில்க் ஸ்மிதா, எம் என் நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் பாக்கியராஜ் எம்ஜிஆரின் தங்கை மகனாக நடித்திருப்பார்.

1976 இல் எம்ஜிஆர் நடிப்பில் அண்ணா நீ என் தெய்வம் என்ற படம் உருவானது. ஆனால் 1977ல் எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்று இருந்த காரணத்தினால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பாக்யராஜ் அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக அவசர போலீஸ் 100 என்ற படத்தை எடுத்து வெற்றி கண்டார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News