திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அண்ணாச்சியை மேடையில் அசிங்கப்படுத்திய ராதாரவி.. என்ன இப்படி காமெடியா குத்தி கிழிச்சிட்டாரு!

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் ராதாரவி சமீப காலமாக பிரபலங்கள் பலரையும் விமர்சித்து வருகிறார். ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போதும் உடனே இவர் மேடையில் நடிகர், நடிகைகளை பற்றி ஓப்பனாக கமெண்ட் கொடுக்க ஆரம்பித்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை கலாய்த்து பேசி இருக்கிறார். அதாவது இப்போதைய சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக களம் இறங்கி வருகின்றனர். அதனால் ராதாரவிக்கும் தன் மகனை சினிமாவில் இறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.

ஆனால் அவருடைய மகனுக்கு சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் கிடையாதாம். இதை பற்றி கூறிய ராதாரவி இப்போது அனைவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு ஏன் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கூட ஹீரோவாக களம் இறங்கி விட்டார்.

அவர் விளம்பர படங்களில் ஆடும் போதே நான் நினைத்தேன் நிச்சயம் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பானு என்று அதேபோன்று இப்போது நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் தான் சினிமா கெட்டுப் போகிறது என்று அண்ணாச்சியை அவர் அசிங்கப்படுத்தவும் விதமாக பேசியிருக்கிறார். மேடையில் ஒருமையாக பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலும் இது போன்ற ஆட்களால் தான் சினிமாவில் நடிக்க பலரும் தயங்குகிறார்கள் என்று கூறி இருக்கும் அவர் சினிமாவில் நன்றி கெட்டவர்கள் பல பேர் இருக்கின்றனர் என்று புது குண்டையும் போட்டுள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இப்போது அண்ணாச்சியை பற்றி பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் ராதாரவி இவரை பற்றி பேசி இருப்பது திரையுலகில் சில விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Trending News