ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சூர்யா பட கதை மாதிரி நடிக்க ஆசைப்படும் விஜய்.. தளபதியின் ஏக்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர்

காதல், குடும்பம், காமெடி, அதிரடி , அரசியல் என அனைத்து விதமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர் தளபதி விஜய்.

‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ பட வெற்றிகளை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார், வாரிசு திரைப்படத்திற்கு பிறகு விஜய் தனது 67 வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார், இந்த திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது ‘சர்க்கார்’, ‘மெர்சல்’ திரைப்படத்தின் மூலம் மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் அரசியல் பேசிய விஜய், ‘பிரண்ட்ஸ்’ ‘பத்ரி’ என காமெடி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

ஆரம்ப நாட்களில் ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ் மோர்’ என காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர், பின்னாளில் ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என ஆக்சன் திரைப்படங்களிலும் வெற்றி கண்டார்.

ஆனால், விஜய்க்கு இதுவரை கண்டன்ட் ஓரியண்டட் படங்கள் இதுவரை சரியாக அமையவில்லை என்பது மிகப்பெரிய ஏக்கமாகவே உள்ளது, இதை விஜய்யே இயக்குனர் பாசிலிடம் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படத்தை பார்த்து விஜய் மிகவும் வியந்து உள்ளார். ‘சூரரை போற்று’ போன்ற கண்டன்ட் ஓரியண்டட் படங்கள் மீதான தனக்கு இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் சமூக நலன் கொண்ட கதையம்சத்தில் விஜய் ஏற்கனவே வக்கீலாக நடித்து இருக்கிறார். இனி வரும் காலங்களில் ‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற கண்டன்ட் ஓரியண்டட் கதையம்சம் கொண்ட திரைப்படத்தை விஜய்யிடம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Trending News