தான் எடுத்த ஐந்து படங்களுமே ஹாலிவுட் தரத்தில் எடுத்த இயக்குனரால் தான் சிபிராஜின் சினிமா வாழ்க்கையே வெளிச்சம் பெற்றது என சொல்லலாம். சினிமாவுக்கு வந்த காலங்களில் சரியான கதைகள் கிடைக்காமல் அவரின் சினிமா வாழ்க்கையே முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற திரில்லர் படம் மூலம் சிபிராஜின் சினிமா வாழ்க்கையை காப்பாற்றியவர் தான் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.
சக்தி சௌந்தர்ராஜானின் 5 த்ரில்லர் படங்கள்: வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக இருந்த சக்தி சௌந்தர்ராஜன், தன்னுடைய 5 படங்களுமே ஹாலிவுட் படம் போன்ற கதையம்சம் கொண்டதாகவே எழுதி இயக்கி இருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன்.
நாணயம் : சிபிராஜ், பிரசன்னா, SP பாலசுப்ரமணியம் நடித்த திரைப்படம் நாணயம். ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த கதை அடுத்தடுத்து ட்விஸ்ட் உள்ள படம். சிபிராஜ் கதாநாயகனாகவும், பிரசன்னா ஒரு வில்லானிக் ஹீரோவாகவும் மிரட்டி இருப்பார். ஒரு வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரியை வைத்தே வங்கியை கொள்ளை அடிக்க முயல்வது தான் இந்த கதை.
நாய்கள் ஜாக்கிரதை: நாய், குரங்கு, யானை, பாம்பு என விலங்குகளை வைத்து பல படங்கள் வந்தாலும், இந்த திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. சிபிராஜிற்கு இந்த திரைப்படம் சினிமாவில் மறுபிரவேசம் தான். ராணுவத்தில் இருந்து தகுதி நீக்கப்பட்ட நாயின் உதவியுடன் கடத்தப்பட்ட தன் மனைவியை கண்டுபிடிக்கும் போலீசின் கதை. வழக்கமான கதைதான் என்றாலும், அந்த படத்திற்கு அந்த நாய் தான் கூடுதல் கவனம் சேர்த்தது.
மிருதன்: இந்தியாவில் முதன்முதலில் எடுக்கப்பட்ட சோம்பி திரைப்படம் மிருதன் தான். கொடிய வைரஸ் தாக்கி மிருகமாக மாறும் மனிதன் மற்றவர்களையும் தாக்கி அவர்களையும் மிருகமாக்குகின்ற கதை. மேற்கத்திய கதையம்சம் கொண்டிருந்தாலும் அத்தனை சோம்பிக்கைளையும் கதாநாயகன் மட்டுமே அழிப்பது எல்லாம் அப்படியே அக்மார்க் தமிழ் சினிமா.
டிக் டிக் டிக் : விண்வெளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். படம் முழுக்க சயின்ஸ் பிக்சன் பரவி கிடைக்கும் கதை என்றாலும், சில காட்சிகள் நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். இருந்தாலும் விண்வெளி காட்சிகள் அனைத்தும் மிக பிரமாண்டமாக எடுத்திருப்பார். அப்பா-மகன் பாசம், பூமியை தாக்க வரும் ஏரிகள் என விறுவிறுப்பாக படம் அமைந்து இருக்கும்.
டெடி: டெடி திரைப்படம், சிறப்பு அனிமேஷன் கதாபாத்திரத்தை வடிவமைக்க இந்திய அனிமேஷன் நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் தமிழ்த் திரைப்படம் டெடி மற்றும் ரஜினியின் கோச்சடையான் படத்திற்குப் பிறகு மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ்த் திரைப்படம்.
வித்தியாசமான கதைகளையே இதுவரை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் நடிக்கும் கேப்டன் திரைப்படத்தை இயக்கி வருகிறார், இதுவும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் ஆகும்.