மொத்த சொத்தையும் புடுங்கிட்டு விட்டுட்டாங்க.. நொந்து நூடுல்ஸ் ஆன தியாகு

எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாத்துறையில் பங்காற்றி வருபவர் நடிகர் தியாகு. பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.

விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களுடன் நெருக்கமாக பழகக்கூடியவர் தியாகு. மேலும் வடிவேலு, விஜயகாந்த் இடையே ஆன பிரச்சனையே வெளிப்படையாக பேட்டிகளில் தியாகு கூறியுள்ளார். சினிமாவைப் போல அரசியலிலும் இவர் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

தியாகு கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக திமுகவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்தார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் அப்போது தேர்தல் பிரச்சாரம், மற்ற பொது கூட்டங்களில் தியாகு தான் மேடைகளில் பேசுவார். அதன்பின்பு திமுக தன்னை வெறும் மேடைகளுக்கு தான் உபயோகபடுத்துகிறது என உணர்ந்து அதிமுகவில் தியாகு இணைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரு ஊடகத்திற்கு இதுகுறித்த தியாகு பேசியிருந்தார். அதாவது கருணாநிதி மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. இதனால் அந்த கட்சியின் மீது நம்பிக்கையாக இருந்தேன். ஆனால் என்னுடைய மொத்த சொத்தையும் புடிங்கிட்டு விட்டுட்டாங்க என வருத்தமாக கூறினார்.

அப்போது மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனாலும் கலைஞர் அப்படி செய்யக் கூடிய ஆள் இல்லை. என்னவென்று தெரியவில்லை என் விஷயத்தில் இப்படி நடந்து கொண்டார்கள். இதனால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தேன் என தியாகு கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →