ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நாங்க அதிகம் வாங்கிய சம்பளம் இவ்வளவுதான்.. வெளிப்படையாய் சொன்ன பிரபு, கார்த்திக்

80, 90களில் ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தா நவரச நாயகன் கார்த்திக் மற்றும் பிரபு இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உண்டு. இவர்களது கூட்டணியில் 1988 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அக்னி நட்சத்திரம்’ திரையரங்கில் தாறுமாறாக ஓடி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தமிழ் நடிகர்களின் மீது பரவலாக குற்றச்சாட்டு எழுகிறது.

ஆனால் நடிகர் கார்த்தி மற்றும் பிரபு இருவரும் ஏகப்பட்ட படங்களில் நடித்தாலும் அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்த 90 காலகட்டத்தில் அவர்களது சம்பளம் ஒரு படத்திற்கு 30 லட்சம் தானாம். அந்தத் தொகை இப்போது ஒரு கோடிக்கு சமம்.

மேலும் இவர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் கவுரவ வேடத்தில் நடிக்கச் சென்றால், அதற்கு சம்பளம் கேட்க மாட்டார்களாம். ஒரு நட்புக்காக நடித்துக் கொடுப்பார்களாம். அந்த அளவிற்கு அப்போது இருந்த நடிகர்கள் பெருந்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது இருக்கும் நடிகர்கள் ஒரு படத்தில் இரண்டு சீன்களுக்கு மட்டுமே வந்தாலும், அதற்காக நாள்கணக்கில் சம்பளம் கேட்டு வாங்குகின்றனர். இந்த சூழல் மாற வேண்டும். மக்களை மகிழ்விக்கும் கலையில் இருந்து கொண்டு நடிப்பதை வியாபார நோக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைகளைப் பார்த்து கார்த்திக், முரளி போன்ற மூத்த நடிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும் படத்தில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகிகளே பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக எடுத்துக் கொண்டால் எப்படி தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வெளியாகும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

Trending News