பாலாவை பற்றி நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள் என எல்லோருமே பல குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். அதாவது ஒரு காட்சி சரியாக எடுக்க வேண்டும் என நடிகர், நடிகைகளை படாதபாடு படுத்து விடுவாராம் பாலா. ஆனாலும் அவர் படத்தில் நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
ஆனால் தற்போது பாலாவுக்கு கஷ்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவருடைய சொந்த வாழ்க்கை, திரை வாழ்க்கை இரண்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இதற்கெல்லாம் ஒரு தயாரிப்பாளர் விட்ட சாபம் தான் என்று பலரும் கூறிவருகின்றனர்.
அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில் போன்ற படங்களை தயாரித்தவர் அழகன் தமிழ்மணி. இவரை பாலா வற்புறுத்தி நான் கடவுள் படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பாலா மீது குற்றச்சாட்டுகளை அழகன் தமிழ்மணி அடுக்கிக்கொண்டே போனார்.
அதாவது பாலா யாருமே படத்தில் அழகா இருக்க கூடாது என்று நினைக்க கூடியவர். இதனால் நான் கடவுள் படத்திற்காக ஒரு வருடம் தாடி வளர்த்தேன். அப்போது என் அம்மா இறந்தபோது கூட என்னால் தாடியை எடுக்க முடியவில்லை. அப்போது தாடியுடன் தான் என் அம்மாவுக்கு கொல்லி வைத்தேன்.
ஆனால் பாலா எனக்கு கொல்லி வைத்து விட்டான் என ஆவேசமாக அழகன் தமிழ்மணி கூறினார். அதாவது பிரிட்ஜில் இருந்து கீழே விழும்போது உள்ள காட்சி பத்துமுறை எடுக்கச் சொன்னார். செத்தாலும் பரவாயில்லை என்று விழுந்த உடனே டேக் ஓகேனு சொல்லிட்டாரு.
அதுமட்டுமல்லாமல் ஒருமுறை பேட்டியில் நான் கடவுள் படத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கு பாலா யாரை கேட்டு சொன்னீர்கள் என என்னிடம் கோபித்துக் கொண்டார். மேலும் நான் கடவுள் படத்திலிருந்து பாலா ஒரு வெற்றி படமும் கொடுத்ததில்லை.
என்னுடைய நெஞ்சு, வயிறு எரிகிற மாதிரி ஒருநாள் உனக்கும் எரியும் என அழகன் தமிழ்மணி பாலாவுக்கு சாபம் விட்டிருந்தார். அவர் விட்ட சாபமோ என்னவோ தெரியவில்லை தற்போது பாலா வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் சுற்றித் திரிகிறார். இனிமேலாவது யாரும் உனக்கு அடிமை இல்லை என புரிந்து நடந்து போகிற வரைக்கும் நீ முன்னேறவே மாட்ட என அழகன் தமிழ்மணி கூறிவுள்ளார்.