வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கவர்ச்சிக்கு விளக்கம் கொடுத்த குடும்ப குத்து விளக்கு.. புடவையில கூட அதை தேடுவீங்களா!

சினிமாவுக்கு வந்த புதிதில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த அதற்கேற்றார்போல் நடித்து வந்த நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது அதற்கான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

சின்னத்திரை மூலம் என்ட்ரி கொடுத்த சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் வாணி போஜன். ஆரம்பத்தில் சீரியலை போலவே வெள்ளித்திரையிலும் ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனால் சின்னத்திரை போல் இவரால் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை. பெரும்பாலும் செகண்ட் ஹீரோயின் வாய்ப்புகள்தான் வாணி போஜனை தேடி வந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகளை படக்குழுவினர் நீக்கி இருந்தனர்.

இதனால் உச்சகட்ட மன உளைச்சலில் இருந்த வாணிபோஜன் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் பட விழாக்கள் மற்றும் ஆடியோ லான்ச் போன்ற நிகழ்ச்சிகளில் வாணி போஜன் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். தற்போது இது குறித்து கேள்வி வாணி போஜன் இடம் கேட்கப்பட்டது. அதற்கு கவர்ச்சி காட்டுவது தப்பில்லை, எல்லை மீறிதான் போகக் கூடாது என பதிலளித்துள்ளார்.

மேலும் புடவை கட்டினால்கூட கவர்ச்சின்னு சொல்றாங்க, அது அவர்களுடைய எண்ணத்தில் தான் இருக்கிறது. இதனால் தங்களுக்கு எந்த உடை பிடித்திருக்கிறதோ அது போன்ற உடையை அணிவது தப்பு இல்லை என வாணிபோஜன் கூறியுள்ளார். இதனால்தான் தற்போது வாணி போஜனும் கவர்ச்சி காட்டி வருகிறார்.

- Advertisement -

Trending News