ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

துரோகம் செஞ்ச நீ வெளியே போகனுமா.? நா போகனுமா.? அட்ரா சக்க, பாக்யாவை சுத்தலில் விடும் கோபி

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு வீட்டிற்கு வந்த பாக்யா, பொட்டியை கட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் என அனைவரும் அவரை சமாதானப்படுத்தி வீட்டில் இருக்கும்படி வற்புறுத்துகின்றனர்.

மேலும் கோபி விவாகரத்து ஆன பிறகு இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என வீட்டை விட்டு வெளியேறி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிப் பாக்யாவை அசிங்க படுத்துகிறார். ஒருகட்டத்தில் அவர் கையில் இருக்கும் பெட்டியை வீட்டைவிட்டு வெளியே எறிந்து நடையைக் கட்டு என கோபி கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார்.

ஆனால் அவர் விட்டெறிந்த பெட்டியில் கோபியின் உடைமைகள் இருந்தது. இதைப் பார்த்ததும் பதறிப்போன கோபி, ‘என்னுடைய சொந்த உழைப்பில் கட்டிய வீட்டை விட்டு நான் வெளியே போக வேண்டுமா! எவ்வளவு தைரியம் இருந்தால் என்னுடைய துணிகளை பெட்டியில் எடுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே போ என சொல்வாய்’ என கோபி பாக்யாவை அடிக்க கை ஓங்குகிறார்.

அதை தடுத்த கோபியின் அப்பா, ‘அட்ரா சக்க, பாக்யா சரியான முடிவு எடுத்திருக்கிறார். தப்பு செய்த நீ தான் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்’ என பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். ஆனால் கோபியின் அம்மா மட்டும் கோபிக்கு சாதகமாக பேசுகிறார்

உடனே பாக்யா இந்த வீட்டில் இருக்கும் யாருடனும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. துரோகம் செய்த உங்களுடன் இனி ஒன்றாக பெட்ரூமில் இருக்க முடியாது. இந்த வீட்டில் நீங்கள் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் முன்புபோல் ஒரே அறையில் உங்களுடன் வாழ முடியாது என சரியான முடிவெடுத்து கோபியை வீட்டை விட்டு வெளியே போ என சொல்கிறார். ‘இந்த வீட்டிற்காக 40 லட்சம் செலவு செய்திருக்கிறேன். அந்தப் பணத்தைக் கொடுத்துவிடு! நான் வீட்டை விட்டுப் போகிறேன்’ என்று கோபி பாக்யாவிற்கு செக் வைக்கிறார்.

உடனே பாக்யா அந்த 40 லட்சத்தை திருப்பித் தருவதாக சபதம் இடுகிறார். கோபியும் அந்த வீட்டை விட்டு வெளியே போக சம்மதித்து கிளம்புகிறார். இதன் பிறகு பாக்யா தனது கேட்டரிங் தொழிலில் முழு கவனம் செலுத்தி, அந்த 40 லட்சத்தை சம்பாதித்து கோபியின் மூஞ்சியில் விட்டு ஏறிய போகிறார்.

இதுதான் சாக்கு என கோபியும் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு ராதிகா வீட்டில் தங்கப் போகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் தயாராகிறார்.

Trending News