உதயநிதி ஸ்டாலின் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதிலும் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்ட படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. பெரிய நடிகர்களின் படங்களின் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றியது. இதனால் மற்றப் விநியோகிஸ்தர்கள் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
அதாவது தமிழ் சினிமாவை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் ஆட்சி செய்கிறது. மேலும் உதயநிதி கையில்தான் எல்லாம் இருக்கிறது, அவர் வைத்தது தான் சட்டம் என்பதுபோல பேசிவருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இது புகாராக முதலமைச்சரிடம் போயுள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால் உதயநிதி வந்த பிறகு தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் படங்களை சுதந்திரமாக ரிலீஸ் செய்ய முடிகிறது. மேலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கணக்கு வழக்குகளை கரெக்ட்டாக கொடுக்கிறது.
முன்பெல்லாம் படம் வெளியாகி எப்படியும் ஒரு வருடமாவது இழுத்துதான் தயாரிப்பாளர்களிடம் பங்கை வினியோகஸ்தர்கள் கொடுப்பார்கள். ஆனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உடனுக்குடன் கணக்கை செட்டில் பண்ணி விடுகிறது. இதனால் பெரும்பாலானோர் தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை நாடி தான் வருகிறார்கள்.
ஆனால் இதெல்லாம் தெரியாதா முதலமைச்சர்ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸை கூப்பிட்டு கண்டித்து சில அறிவுரைகளையும் கூறி உள்ளார். ஆனால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆல் தான் தமிழ் சினிமாவிற்கு விடிவு காலம் பிறந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.