வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உலகளவில் விளம்பரப்படுத்திய விஜய் தேவரகொண்டாவின் லைகர்.. இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கல!

நடிகர் விஜய் தேவர் கொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள படம் லிகர். பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கரண் ஜோஹர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.

லிகர் படத்தில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவின் அம்மாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற வெயிட்டான கதாபாத்திரம் இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: மட்டமான போஸ்டரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

மேலும் முன்னாள் குத்துச்சண்டை உலகச் சாம்பியன் மைக் டைசன் அவர்களும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி லிகர் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது பிரம்மாண்டமாக புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த ஹிந்தி பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் சில மோசமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பார்ப்போருக்கு அருவருப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாம்.

liger-vijay deverakonda

Also Read: லயனுக்கும், டைகருக்கும் பிறந்த கிராஸ் ப்ரீட் இந்த லிகர்.. விஜய் தேவரகொண்டா பட ட்ரைலர்

மேலும் பிரபலங்களும் இப்படத்திற்கு குறைந்த ரேட்டிங் தான் கொடுத்துள்ளனர். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே லிகர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் மூன்றாவது பாடல் வெளியாகி நிறைய உள்ளர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது.

liger-vijay deverakonda

இதன் காரணமாகவே இப்போது இந்த படம் பிரபலங்களை கவர தவறி இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே இப்படிப்பட்ட விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என்பதும் சந்தேகம்தான். முதல் முறையாக ஹிந்தி திரை உலகில் அறிமுகமாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்குமா என்பது பட வெளியீட்டிற்கு பிறகு தெரியவரும்.

Also Read: விஜய் தேவரகொண்டா பட நடிகையின் காதை கடிக்கும் மைக் டைசன் புகைப்படம்

- Advertisement -

Trending News