சினிமாவில கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்கள் பலர் இருக்கின்றனர். மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்து சினிமாவில் சாதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரைப் போலவே பல நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபித்து இன்று பெரிய ஆளாக முன்னேறி இருக்கின்றனர்.
பணக்கார குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகர் ஒருவர் நூறு வயது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் 57 வயதில் அனுபவித்துவிட்டு இந்த உலகை விட்டுப் பிரிந்து உள்ளார். வில்லத்தனமான நடிப்பில் அவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இன்றும் அவர் வில்லனாக மிரட்டிய படங்களை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.
ரஜினியின், பாட்ஷா படத்தில் அவருக்கு வில்லனாக மிரட்டி நடித்தவர் ரகுவரன். தனது தனித்துவமான நடிப்பால் இன்று வரை தமிழ் சினிமாவிற்கு ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார். அவர் இடத்தை பிடிப்பதற்கு தமிழ் சினிமாவில் இன்றும் பல வில்லன் நடிகர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ரகுவரனுக்கு 24 வயதிலேயே நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்களாம். பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பாராம். அமெரிக்க நடிகர் ராபர்ட் ரெட் போர்டை போல மிக உயரமாகவும், மிடுக்காகவும் இருப்பதால் அடுத்தடுத்து இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.
இப்படி சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்திற்கு சென்றவருக்கு காத்திருந்தது பெரிய அடிகள். இவருடன் நடித்த ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ஏற்கனவே மது பழக்கம் இருந்த ரகுவரன் அதன்பின் எல்லை மீறி குடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் கடைசியாக நடித்த படம் யாரடி நீ மோகினி. இப்படி இளவயதிலேயே ஆண்டு அனுபவித்த ரகுவரன் 57 வயதில் இறந்துவிட்டார். இவரது இறப்பு தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.