ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

வில்லனாக மிரட்டியும் அங்கீகாரம் கிடைக்காத நடிகர்.. சினிமாவில் கொடி கட்டிப் பறந்தும் வாடகை வீடுதான்

சினிமாக்காரர்கள் என்றாலே பெரிய பங்களா, ஆடம்பர வாழ்க்கை முறை என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் நிஜத்தில் பெரிய நடிகர்கள் ஓரளவு வசதியாக இருந்தாலும் துணை கதாபாத்திரங்கள், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த பலர் வறுமையால் வாடி வருகின்றனர்.

சொல்லப்போனால் பறவை முனியம்மா, வடிவேல் பாலாஜி போன்றோர் மருத்துவ செலவுக்கு கூட வசதி இல்லாமல் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டிய பிரபல நடிகர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருந்து உயிரிழந்துள்ளார்.

Also Read :2019-ல் மரணமடைந்த திறமையான பிரபலங்கள்..

மலையாள சினிமா மூலம் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. நாசர் எழுதி, இயக்கி, நடித்த அவதாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா சிங். இப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்ட அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை நாடி வந்தது.

இதை தொடர்ந்து இந்தியன், உல்லாசம் போன்ற பல படங்களில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பாலா சிங் வில்லனாக மிரட்டி இருந்தார். குறிப்பாக தனுஷின் புதுப்பேட்டை படத்தில் அன்புவாக கலக்கிக் இருந்தார்.

Also Read :நடிப்பு எல்லாம் சைடு தான்.. பட்டையை கிளப்பிய பழைய புதுப்பேட்டை செல்வராகவன்

சூர்யாவுடன் மாசி, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே போன்ற படங்களில் பாலா சிங் நடித்துள்ளார். இவர் தனது 67வது வயதில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி 2019இல் உயிர் நீத்தார். பாலா சிங் இறப்பதற்கு முன்பு வரை படங்களில் நடித்து வந்தார்.

கடைசி வரை துணை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வாழ்க்கையை ஓட்டி விட்டார். சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இவர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே இருந்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த இவருக்கே இந்த நிலைமை என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

Also Read :சினிமாவைத் தாண்டி 300 கோடி சம்பாதிக்கும் சூர்யா.. போட்டி போட்டு கல்லா கட்டும் அண்ணன், தம்பி

- Advertisement -spot_img

Trending News