மகன் செய்த சில்மிஷ வேலை.. ஊர் முன்னாடி மருமகளிடம் அசிங்கப்பட்ட சிவகாமி

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் செந்திலின் மனைவி  அர்ச்சனாவிற்கு, மாமியார் சிவகாமி தடபுடலாக வளைகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு சிவகாமியின் இளைய மகனான ஆதி, தன்னுடைய காதலி ஜெசியையும் வர வைத்திருக்கிறார்.

மேலும் சந்தியாவும் ஜெசியும் ஒரே இடத்தில் படிப்பதால் அவர்கள் இருவரும்  நெருங்கிய தோழிகள். இந்நிலையில்  அர்ச்சனாவின் வளைகாப்புக்கு வந்த ஜெசி திடீரென்று மயங்கி விழுகிறார்.  உடனே சிவகாமியின் மாமியார் அவரது கையைப் பிடித்து பார்த்ததும் அவர் கர்ப்பமாக இருப்பதை சொல்லி விடுகிறார்.

Also Read: சீரழியும் சின்னத்திரை, முத்த காட்சியில் சந்தி சிரித்த ராஜா ராணி!

திருமணமாகாத ஜெசி கர்ப்பமாக இருப்பதால், அவரை வீட்டை விட்டு வெளியேறுகிறார் சிவகாமி.  உடனே ஜெசி, ‘இந்த வீட்டில் இருக்க எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. இது என்னுடைய வருங்கால புருஷன் வீடு. என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா உங்களுடைய மகள் ஆதி தான்’ என  கூடியிருக்கும் சபையினர் முன்பு  சிவகாமியின் வாயை அடைகிறார்.

இதைக் கேட்டதும் சிவகாமி மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் அனைவரும் உறைந்து போய் நிற்கின்றனர். மகன் செய்த சில்மிஷ வேலைகளால் சிவகாமி வருங்கால மருமகளிடம் அசிங்கப்பட்டு போனது அவருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

Also Read: ஆலியா மானசாவை ஓரங்கட்டிய அர்ச்சனா!

இதன்பிறகு ஆதியை வெளுத்து வாங்கும் சிவகாமி, வேறு வழியில்லாமல் கர்ப்பமாக இருக்கும் ஜெசியை தன்னுடைய மூன்றாவது மருமகளாக ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஜெசி மற்ற இரண்டு மருமகளான சந்தியா, அர்ச்சனாவை விட கொஞ்சம் திமிரு தனமாகத்தான் நடந்துகொள்வார்.

ஜெசி மருமகளாக வீட்டிற்கு வந்த பிறகுதான் அர்ச்சனா, சந்தியா எவ்வளவு மதிப்பு மரியாதை கொடுத்தர் என்பதை சிவகாமி புரிந்து கொள்வார். இருப்பினும் இந்த சீரியலில் சுவாரசியம் குறைந்து கடந்த சில நாட்களாகவே டல் அடித்துக் கொண்டிருக்கிறது.

Also Read: விஜய் டிவி குறிவைக்கும் பிரபலங்கள்