ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வளர்த்துவிட்ட குருவுக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பாக்யராஜ்.. வளர்த்த கெடா மார்பில் முட்டிய சம்பவம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கூட்டில் இருந்த தமிழ் சினிமாவிற்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கதையாசிரியர் என பலர் வந்துள்ளனர். அந்த வகையில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு சினிமாவில் நுழைந்தவர் தான் பாக்யராஜ்.

தனது திறமையால் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர் என பன்முகத் தன்மையை பாக்யராஜ் வளர்த்துக்கொண்டார். இந்நிலையில் நாம் எவ்வளவு பெரிய இடத்தை நோக்கி சென்றாலும் ஆரம்ப புள்ளியை மறந்துவிடக்கூடாது. ஆனால் வளர்த்த கெடா மார்பில் முட்டியது போல பாக்யராஜ் நடந்து கொண்டுள்ளார்.

Also Read : பொதுவெளியில் அநாகரியமாய் போட்ட சண்டை.. 17 வருடமாக பாரதிராஜாவுடன் இணையாத டாப் நடிகர்

அதாவது பாரதிராஜாவின் இயக்கத்தில் சுதாகர், ராதிகா, ரதி என பலர் நடிப்பில் 1979 இல் வெளியான திரைப்படம் நிறம் மாறாத பூக்கள். இப்படத்தின் கதையை முதலில் பஞ்சு அருணாச்சலம் எழுதி உள்ளார். ஆனால் பாரதிராஜாவிற்கு ஏதோ ஒரு நெருடல் இருந்த காரணமாக பாக்யராஜிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அதன் பின்பு பாக்யராஜ் திரைக்கதையை மாற்றி எழுதிவுள்ளார். பஞ்சு அருணாச்சலம் பாக்யராஜின் கதை நன்றாக உள்ளது என கூறி உள்ளார். அதன்பின்பு பாக்யராஜின் திரை கதையிலேயே நிறம் மாறாத பூக்கள் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

Also Read : பாக்கியராஜின் முதல் மனைவி யார் தெரியுமா.? சிவாஜி, எம்ஜிஆர் உடன் வைரலாகும் திருமண புகைப்படம்

இந்நிலையில் பாக்யராஜிடம் அனுமதி வாங்காமல் பாரதிராஜா நிறம் மாறாத பூக்கள் படத்தின் தெலுங்கு ரைட்ஸை விற்றுவிட்டார். இதை அறிந்த பாக்யராஜ் கோபப்பட்ட தனக்கு தெரியாமல் என்னுடைய கதையை விற்றதாக பாரதிராஜா மீ து வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன்னை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட குருவுக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் பாக்யராஜ். பல மேடைகளில் பாரதிராஜா இல்லாமல் நான் இல்லை, அவர் தான் என் குரு என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த பாக்கியராஜ் இவ்வாறு செய்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Also Read : பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்

Trending News