விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா-ரோகித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. அதன்பிறகு ஹோட்டலில் தங்கும் வெண்பா, அங்கு ரோகித் குடிப்பதைப் பார்த்து அவருடன் சேர்ந்து பாரதியை நினைத்துக்கொண்டே குடிக்கிறார்.
ஒருகட்டத்தில் போதை தலைக்கேறியதும் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். மறுநாள் மானம் பறிபோனதே என பைத்தியம் பிடித்தது போல் கத்தி கதறும் வெண்பாவை வேலைக்காரி சாந்தி சமாதானப்படுத்துகிறார். இதையே காரணமாக வைத்து ரோகித் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று திருமணத்தை நிறுத்த பார்க்கிறார்.
Also Read: பாரதியால் குடிபோதையில் கற்பை இழந்த வெண்பா
பிறகு கர்ப்பமாக இருக்கப்போகும் வெண்பா அந்தக் குழந்தைக்கு அப்பாவாக பாரதியை கைகாட்ட போகிறார். இப்படி மானங்கெட்ட வேலையை செய்யும் வெண்பா பாரதிக்கு எந்த பிரச்சனைக்கும் இல்லை என்பதை சொல்லி விடுவார்.
எதிர்பாராத நடந்த விபத்தில் பாரதிக்கு குழந்தை பெறுவதற்கான தன்மை இழந்து விடுவார் என கூறியதெல்லாம் பொய் என்று பாரதியிடம் சொன்னதும் அதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாரதி வெண்பாவின் கன்னத்தை பதம் பார்க்கிறார். பாரதியின் கையால் அறை வாங்கிய வெண்பா மறுபடியும் தூக்கிவாரிப் போடக்கூடிய பழியை பாரதி மீது போடுகிறார்.
Also Read: வளர முடியாமல் தவிக்கும் 5 காமெடி நடிகர்கள்
தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதிதான் அப்பா என்றும், அதற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபிக்கிறேன் என்றும் அவதூராக பாரதியின் மீது குற்றம் சாட்டுகிறார். இதன் பிறகு பாரதி பத்து வருடங்களாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பிரிந்து வாழ்ந்ததை நினைத்து மனம் வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறார்.
அவ்வளவு சீக்கிரம் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒரு கட்டத்தில் இரண்டு மகளுக்காக பாரதியுடன் சேர்ந்து வாழ நினைப்பார். ஆனால் வெண்பா தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாரதிதான் அப்பா என்று கூறியதும் அதுவே அவர்கள் இருவரையும் கடைசி வரை சேரவிடாமல் செய்யப்போகிறது.
Also Read: நீங்க சீரியல் நடிகை என ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்