செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேலி, கிண்டலுக்கு உள்ளான நெப்போலியன்.. வெறிகொண்டு சாதித்து காட்டிய சம்பவம்

குமரேசன் துரைசாமி என்னும் நெப்போலியன், 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தில் தன்னுடைய 28 வயதிலேயே கதாநாயகிக்கு தந்தையாக வித்தியாசமான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் வந்த சின்ன தாயி, பரதன், ஊர் மரியாதை படங்களிலும் வில்லனாகவே நடித்தார்.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் பாரதிராஜா இந்த திரைப்படத்தில் அறிமுகமான குமரேசனுக்கு நெப்போலியன் என்னும் பெயரை வைத்திருக்கிறார்.

Also Read : அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடிய நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மூத்த மகனுக்காக அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

அப்போது நெப்போலியன் தன்னுடைய நண்பர்களிடம் பாரதிராஜா தனக்கு வைத்த பெயரை கூறியிருக்கிறார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை பயங்கரமாக கேலி செய்து இருக்கின்றனர். சரக்கு பாட்டில் பெயரை வைத்திருப்பதாக கூறி அவரிடம் வீண் பேச்சு பேசி வம்பிழுத்து இருக்கிறார்கள்.

பயங்கர கோபமான நெப்போலியன் உங்கள மாதிரி அருண், விஜய், ஷங்கர்னு பேர் வச்சா என்னால தமிழ் படத்துல மட்டும் தான் நடிக்க முடியும். இப்போ நெப்போலியன்னு பேர் வச்சதால ஒரு நாள் நா ஹாலிவுட் படம் நடிப்பன்னு சொல்லியிருக்கிறார். சொல்லியதை நெப்போலியன் செய்தும் காட்டியிருக்கிறார்.

Also Read : விஜய் வேணும்னே அப்படி செய்தது எனக்கு புடிக்கல.. நேரடியாகவே சொன்ன நெப்போலியன்

1994 ஆம் ஆண்டு இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி, 1997 ஆம் ஆண்டு நடித்த எட்டுப்பட்டி ராசா படங்களுக்கு பிறகு நெப்போலியனுக்கு ஹீரோ இமேஜ் வந்துவிட்டது. அதன் பிறகு நெப்போலியன் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார். பின்னர் நெப்போலியன் அவர் நண்பர்களிடம் சொன்னபடியே ஹாலிவுட் படங்களில் நடித்தார்.

2019 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்துமஸ் கூப்பன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு டெவில்ஸ் நைட், டிராப் சிட்டி, ஒன் மோர் டிரீம் என அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

Also Read : நெப்போலியனின் கண்ணீர் கதை.. இந்த மனுசனுக்குள்ள இவ்வளவு கஷ்டங்களா?

Trending News