ஊசி இடம் கொடுக்காமல், நுால் நுழையாது.. அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைக்கு காரணமே நடிகைகள் தான்

அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்து பலரும் தைரியமாக பேசி வந்தாலும் இதை சில நடிகைகளே விரும்பித்தான் ஏற்றுக் கொள்கின்றனர் என்ற செய்தி பலரையும் அதிர வைக்கிறது. இதற்கு காரணம் நான்கு படங்களில் கஷ்டப்பட்டு வாங்கும் சம்பளத்தை அவர்கள் ஒருமுறை அட்ஜஸ்ட் செய்வதின் மூலம் பெற்று விடுகிறார்கள்.

இது சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதார தேவையை தீர்ப்பதோடு, அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்கிறது. இதைப் பற்றி தற்போது நடிகை விஜயலட்சுமி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னை 28 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி தான் இவரை அதிக பிரபலம் ஆக்கியது.

தற்போது குடும்பம், நடிப்பு என்று இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் அவர் திரைத்துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கூறியிருக்கிறார். தற்போது மீ டூ புகார் அதிகமாக வர தொடங்கி இருக்கிறது. இதற்கு ஆண்கள் ஒரு வகையில் காரணமாக இருந்தாலும் பெண்களுக்கும் அதில் முக்கிய பங்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசும்போது அவர்கள் எதற்காக சம்மதிக்க வேண்டும். ஒரு பெண் அதற்கு சம்மதிப்பதால் தான் அவர்கள் தைரியமாக மற்ற பெண்களிடமும் இதை கேட்கின்றனர்.

அதனால் நடிகைகள் இது போன்ற விஷயங்களில் தைரியமாக செயல்பட வேண்டும். வாய்ப்பு மற்றும் பணத்துக்காக இது போன்ற விஷயங்களை அவர்கள் தேர்ந்தெடுக்க கூடாது. இதன் மூலம் தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையிலிருந்து நடிகைகள் வெளிவர முடியும் என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு இயக்குனரின் மகளான என்னிடம் கூட பலரும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அவரின் இந்த அதிரடியான கருத்துக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஒருவகையில் விஜயலட்சுமி சொல்வதும் சரிதான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.