சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ராசியில்லாதவன் என முத்திரை குத்தப்பட்ட விதார்த்.. நடிப்பு, கதை என அசத்தியும் வரவேற்பு இல்லாத 5 படங்கள்

விதார்த் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார். அதிலும் பிரபு சாலமனின் மைனா படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அதன் பின்பு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருந்தாலும் விதார்த் ராசியில்லாதவன் என முத்திரை குத்தப்பட்டதால் அந்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.

குரங்கு பொம்மை : விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குரங்கு பொம்மை. இப்படத்தில் கதிர் கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருந்தார் விதார்த். ரசிகர்களிடையே இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also Read : சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காமல் ஜொலிக்க திணறும் 6 நடிகர்கள்.. 20 வருடங்களை கடந்த விதார்த்தின் விடாமுயற்சி

ஒரு கிடாயின் கருணை மனு : விதார்த், ரவீனா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. இப்படத்தில் ஆடு ஒன்றை வைத்த கதை நகருகிறது. இந்தப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற நிலையில் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

பயணிகள் கவனிக்கவும் : விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பயணிகள் கவனிக்கவும். ஒரு பயணத்தை மையமாக வைத்த நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் எழில் என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விதார்த்.

Also Read : 15 வருடங்களாக வளர முடியாமல் தவிக்கும் விதார்த்.. மோசமான பிம்பத்தினால் மாறாத அந்தஸ்து

குற்றமே தண்டனை : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுமான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குற்றமே தண்டனை. சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருந்தது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமே பாராட்டுகளைப் பெற்றது.

காற்றின் மொழி : விதார்த், ஜோதிகா நடிப்பில் குடும்பப் படமாக வெளியானது காற்றின் மொழி. மனைவி மீது அதிக அன்பு வைத்திருக்கும் கணவனாக இப்படத்தில் விதார்த் நடித்திருந்தார். எதார்த்தமான கதையை மக்களுக்கு பிடிக்கும் படியாக கொடுத்திருந்தார் இயக்குனர். ஆனால் விதார்த்தின் இந்தப்படமும் தோல்வியை தான் தழுவியது.

Also Read : திறமை இருந்தும் சம்பளத்தை குறைத்த தரமான ஹீரோ.. சினிமாவுல இது புதுசா இருக்கே

Trending News