திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

160 கோடி சோழிய முடிச்சு விட்ட விஜய் தேவரகொண்டா.. லிகர் படத்தால் நொந்து போன ஆடியன்ஸ்

தென்னிந்தியாவில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா லிகர் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் தற்போது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருந்தனர்.

Also read : ஊர் ஊராய் சுற்றி விளம்பரப்படுத்திய விஜய் தேவர் கொண்டா கூட்டணி ஜெயித்ததா.? லிகர் ட்விட்டர் விமர்சனம்

மேலும் பிரமோஷனுக்காக ஏகப்பட்ட செலவும் செய்திருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் செலவழித்த அத்தனை காசும் வீணாக போயிருக்கிறது. அந்த வகையில் படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோகருக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையரங்கு உரிமையை 67 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றிய வாரங்கல் ஶ்ரீனு இதன் மூலம் 30 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த படம் பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

Also read : உலகளவில் விளம்பரப்படுத்திய விஜய் தேவரகொண்டாவின் லைகர்.. இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கல!

படத்தின் கதையில் புதிதாக ஒன்றுமே இல்லாமல் இதுவரை வந்த திரைப்படங்களின் காப்பியாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வளவு காசு கொட்டி விளம்பரப்படுத்தியது எதற்காக என்றும், கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் மூலம் பூரி ஜெகன்நாத் தன்னுடைய மதிப்பை இழந்து விட்டார் என்றும், இனிமேல் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது என்றும் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து நொந்து போய் இருக்கின்றனர். அதிலும் படத்தை பார்த்த சிலர் உங்களை நம்பி படத்தை பார்த்ததற்கு இப்படியா எங்களை வச்சு செய்வீர்கள், எங்களுடைய டிக்கெட் காசை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கதறுகின்றனர்.

ஆக மொத்தம் இந்த ஒரு படம் பூரி ஜெகன்நாத்தின் இத்தனை வருட திரைவாழ்வை ஒரேடியாக காலி செய்து இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இந்த படம் வெற்றி என்று சில நாட்களில் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read : விஜய் தேவரகொண்டா பட நடிகையின் காதை கடிக்கும் மைக் டைசன்.. அடேங்கப்பா! மெர்சலாக்கிய புகைப்படம்

Trending News