சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இருந்த கொஞ்ச நெஞ்ச மானத்தையும் வாங்கிய சம்பந்தி.. பாக்கியாவால் நடைபிணமாக மாறிய கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி-பாக்யா இருவருக்கும் விவாகரத்து நடந்த பிறகு 40 லட்சத்தை ஒரு வருடத்திற்குள் திரும்பி தருவேன் என்று சவால்விட்டு கோபியை வீட்டை விட்டு பாக்யா வெளியேற்றி உள்ளார்.

இதனால் காரிலேயே தங்கியிருக்கும் கோபி, தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகா தன்னை விரைவில் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார் என நம்புகிறார். பாக்யாதான் கோபியை வீட்டைவிட்டு வெளியேற்றினார் என செழியன், இனியா இருவரும் பாக்யாவின் மீது வெறுப்பு காட்டுகின்றனர்.

Also Read: பேரன், பேத்தி எடுக்கிற வயசுல விவாகரத்தா

அதுமட்டுமின்றி செழியனின் மாமியார் மரியம் வீட்டிற்கு வந்து கோபி-பாக்யா இருவரின் விவாகரத்து குறித்து விசாரித்தார். ஆனால் அதனை மருமகள் ஜெனி ஏதேதோ சொல்லி அவர்களுடைய வாயை அடைத்து விட்டார்.

இருப்பினும் அந்த நேரம் செழியனுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக நினைக்கிறார். இதனால் பாக்யாவை கண்டபடி திட்டும் செழியன், வீட்டில் சாப்பிடாமல் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார். அதுமட்டுமின்றி இனியாவும் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நாள் முடியும் தருணத்தில் வந்து பாக்யாவிடம் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறார்.

Also Read: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாக்யா குடும்பம்

உடனே பார்க்கவும் நாளைய தினமே பள்ளியில் வந்து  பணத்தை செலுத்தி விடுகிறேன் என்று சொல்கிறார். பாக்யாவின் மாமனார் பண உதவி ஏதாவது வேண்டுமா எனக் கேட்கிறார். உடனே மாமியார், கோபியை வீட்டை விட்டு வெளியேற்றியதை மனதில் வைத்துக்கொண்டு ‘வாழ்ந்து காட்டுவேன் வாழை மரத்தை வெட்டுவேன் என வசனம் பேசிய நீயே எல்லாவற்றையும் சமாளி’ என்று கடுமையாக பேசுகிறார்.

இவ்வாறு கோபி செய்த தவறை அனைவரும் மறந்து விட்டு, தினமும் பாக்யாவை வீட்டில் இருக்கும் பிள்ளைகள் உட்பட அனைவரும் திட்டுவதால் நிம்மதியை இழந்ந்திருக்கிறார்.

Also Read: பாக்யாவை குத்தி கிழிக்கும் பிள்ளைகள்

Trending News