BB ஜோடி டைட்டிலை தட்டி தூக்கிய ஜோடிகள்.. பிக்பாஸில் விட்டதைப் இங்க பிடிச்சுட்டாங்க

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற புத்தம் புதிய என்டர்டெயின்மென்ட் ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சி விதவிதமான சுற்றுகள் உடன் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த நடன நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

பிக்பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் டைட்டில் வின்னராக அனிதா சம்பத்-ஷாரிக் ஜோடி தட்டி சென்றது. இந்நிலையில் இரண்டாவது சீசனில் கிராண்ட் ஃபினாலேவிற்கான படப்பிடிப்பு தற்போது நடத்தப்பட்டு டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவந்துள்ளது.

இது இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாததால் இந்த தகவலை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் அமீர்-பாவனி இருவரும்தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டனர்.

அதற்கேற்றாற்போல் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக நடனமாடிய அமீர்-பாவனி, சுஜா-சிவக்குமார் ஆகிய இரண்டு ஜோடிகள்களுமே கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் சிறப்பாக ஆடியுள்ளனர்.

இதனால் இந்த இரண்டு ஜோடிகளையும் டைட்டில் வின்னர் ஆக, நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இருவரும் தேர்வு செய்துள்ளனர். மேலும் அமீர் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் பெஸ்ட் பர்ஃபாமென்ஸ் (Best Performer of the Season) அவார்டு கொடுக்கப்பட்டு டிவிஎஸ் பைக் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் வெற்றி பெறும் எண்ணத்தில் இருந்த நிலையில், அதில் விட்டதை தற்போது பிக்பாஸ் ஜோடிகளின் மூலம் பெற்றிருப்பது அவர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் குதூகலப்படுத்தியுள்ளது.