புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆலியாவை தொடர்ந்து ராஜா ராணி2 சீரியலில் விலகும் நடிகை.. டிஆர்பி குளோஸ், ஊத்தி மூட வேண்டியதுதான்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி 2 சீரியலில் முன்பு கதாநாயகியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய பிறகு, அவருக்கு பதில் ரியா சந்தியாவாக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலில் ஆலியா விலகிய பிறகு, ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகி விட வில்லி அர்ச்சனா தான் சிறப்பாக நடிக்கிறார் என பெயர் வாங்கிய விஜே அர்ச்சனா உடைய நடிப்பை பலரும் ரசிக்கின்றனர்.

Also Read: தொடை அழகை காட்டி மயக்கும் அர்ச்சனா

இப்படி இருக்கும் சூழலில் அர்ச்சனாவும் இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் அர்ச்சனாவுக்காக தான் இந்த சீரியலை இன்னும் சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இனி விஜே அர்ச்சனாவிற்கு பதில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அர்ச்சனா குமார், ராஜா ராணி 2 சீரியலில் இனி அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவர் ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலிலும் கதாநாயகியின் இளைய தங்கையாக நடித்திருப்பார்.

சமீப காலமாகவே விஜே அர்ச்சனா ஹீரோயின் ரேஞ்ச்க்கு போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கிக் கொண்டிருந்தார். இதன் மூலம் அவருக்கு வேறு ஏதோ ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். மேலும் வெள்ளித்திரையில் இருந்து கூட சில வாய்ப்புகள் வந்திருக்கிறது.

Also Read: விஜய் டிவிக்கு கும்பிடு போட்டு ஜீ-தமிழ் கிளம்பிய நடிகை

ஆகையால் தான் இப்படிப்பட்ட முடிவை அர்ச்சனா எடுத்திருப்பார். அதுமட்டுமின்றி விஜே அர்ச்சனா மற்றும் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகன் அருண் பிரசாத் இருவரும் காதலர்கள் என்பதால் இவர்களுக்கு ரகசியமாக சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்.

தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவைத் தொடர்ந்து விஜே அர்ச்சனாவும் இந்த சீரியலை விட்டு விலகினால், ராஜா ராணி 2 சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னெட் சீரியலை ஊத்தி மூட வேண்டியதுதான். ஏனென்றால் ஏற்கனவே டிஆர்பி- யில் டல் அடித்துக்கொண்டிருக்கும் ராஜா ராணி 2 இனிமேல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருந்து மறைந்து விடப்போகிறது.

Also Read: சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்

Trending News