புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒதுக்கிய 6 நடிகர்கள்.. ஒரே பாட்டில் இளசுகளை சுண்டி இழுத்த ராம்ஜி

சினிமா கனவுகளுடன் திரைத்துறைக்கு வரும் அனைவருக்கும் எளிதில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் வாய்ப்புகளும் ஒரு சில வருடங்களில் காணாமல் போய்விடும். அந்த வகையில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒதுக்கிய ஆறு நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சியாம் கணேஷ் இவர் ஆனந்தம், யூத் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் சின்னதிரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர் நடிப்பதை குறைத்து விட்டு சொந்த பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also read:சிவாஜியும், ரஜினியும் கூட்டணி அமைத்த 5 வெற்றி படங்கள்.. நடிக்கவே பயந்த சூப்பர் ஸ்டார்

ராம்ஜி நடன இயக்குனராக இருக்கும் இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வில்லன், குணச்சித்திரம் போன்ற பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் காதல் கோட்டை திரைப்படத்தில் வரும் வெள்ளரிக்கா பாடல் தான் இவரை அடையாளப்படுத்தியது. அப்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை கவர்ந்த பாடல்களில் இது முக்கியமான பாடலாக இருந்தது. அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் மகராசி உள்ளிட்ட சில தொடர்களில் நடிக்க வருகிறார்.

போஸ் வெங்கட் சின்னத்திரையில் மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Also read:ரஜினியின் நடிப்பில் திரைப்படமாக உருவான 2 நாவல்கள்.. கொடூர வில்லனாக கலக்கிய சூப்பர் ஸ்டார்

யூகி சேது பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக இவர் நடித்திருப்பார். அதை தொடர்ந்து ரமணா, அன்பே சிவம் போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் கசடதபற என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கிருஷ்ணா தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இவர் பிரபலமானார். ஆனால் அதற்கு முன்பே இவர் ஈரம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார்.

ராமச்சந்திரன் பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். நயன்தாராவின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அறம் திரைப்படத்தில் ஆழ்துளை குழியில் விழும் குழந்தையின் அப்பாவாக இவர் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

Also read:யானைக்கும் அடி சறுக்கும்.. மணிரத்னம் பெயரை கெடுத்த 5 மோசமான படங்கள்

Trending News