விஜய் தேவரகொண்டா ரசிகர்களை எச்சரித்த நடிகை.. ஒரு அளவுக்கு தான் பொறுமை

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படத்திற்கு தற்போது பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அவரின் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படத்திற்கும் இது போன்ற ஒரு மோசமான விமர்சனம் வந்தது கிடையாது.

அந்த அளவுக்கு லிகர் திரைப்படம் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அது குறித்து ட்வீட் போட்ட தொகுப்பாளரும், நடிகையுமான அனுசுயாவுக்கு எதிராக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பொங்கி எழுந்து உள்ளனர்.

அதாவது அனுசியா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அம்மாவின் வலி விலகி போகாது, அது கர்மாவாக திரும்பி வரும். ஆனால் சில சமயங்களில் வர தாமதம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். இது விஜய் தேவார கொண்டவை பற்றிய மறைமுக கருத்து தான் என்று அவருடைய ரசிகர்கள் தற்போது அவர் மீது பயங்கர கோபத்தில் இருக்கின்றனர்.

அதனால் அவர்கள் அனுசுயா குறித்து பல கேவலமான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர் மேலும் அவரை ஆண்டி என்று குறிப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். அனுசியா இப்படி கேலி கிண்டலுக்கு ஆளாவது இது முதல் முறை கிடையாது.

ஏற்கனவே அவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியான சமயத்தில் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அப்போதிலிருந்தே அவருக்கும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கும் இடையே மோதலாக இருக்கிறது.

தற்போது அது இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருப்பதால் அனுசியா கடும் அப்செட்டில் இருக்கிறார். மேலும் அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →