சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

புருஷனை தூண்டிவிட்ட சந்தியா.. எல்லாம் தெரிந்தும் செம்மையா நடிக்கும் பிளேபாய்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிறுவயதில் இருந்தே ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா, திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கணவரின் துணையுடன் போலீஸ் ஆவதற்கு முழு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அவர் ஊர் உலகத்தில் இருக்கும் அநியாயங்களை மட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டு இப்பவே போலீஸ் அதிகாரியாக நடந்துகொள்வார்.

அவருக்கு இப்போது தன்னுடைய சொந்த வீட்டிலேயே இருக்கும் பொறுக்கியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். ஏனென்றால் சிவகாமியின் இளையமகள் ஆதி, ஜெசி என்ற பெண்ணை காதலித்து, திருமணத்திற்கு முன்பே அவரை கர்ப்பமாக்கி உள்ளார்.

Also Read: ஐபிஎஸ் சந்தியா விரித்த வலை

இதை அவர் அர்ச்சனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் போது சிவகாமியிடம் தெரிவித்த போது, ஆதி தன்னுடைய குடும்பத்தின் முன்னிலையில் ஜெசியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்து நம்ப வைத்திருக்கிறார்.

ஆனால் சந்தியாவிற்கு மட்டும் ஆதியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் கூடியிருக்கும் அத்தனை பேர் முன்னிலையில் ஒரு பெண் ஆணின் மீது இப்படிப்பட்ட பழியை போட்டால் கோபம் வந்திருக்கும். ஆனால் ஆதி அந்த இடத்தில் அமைதியாக இருந்தார்.

Also Read: ஐபிஎஸ் வீட்டிலேயே இருக்கும் பொறுக்கி

மேலும் ஆதியை விசாரிக்க குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தயாராகவில்லை. ஆனால் சந்தியாவிற்கு அர்ச்சனாவின் மூலமாக ஆதி-ஜெசி காதல் விவகாரம் தெரியும் என்று சந்தியா சரவணனிடம் ஆதியை ஒருமுறை கூப்பிட்டு விசாரிக்க சொல்கிறார்.

சரவணனும் ஆதியை விசாரிக்கும்போது அழுது கொண்டே தன் மீது எந்த தவறும் இல்லை என உலகமகா நடிப்பை அரங்கேற்றினார். அதன்பிறகு பார்வதிக்கும் ஆதி மீது சந்தேகம் இருப்பதால், அவரும் ஆதியிடம் விசாரித்தார்.

Also Read: முகம் சுளிக்க வைக்கும் விஜய் டிவி

ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்லாமல் சிவகாமி ஆதியை முழுமையாக நம்புகிறார். பெண்ணாக இருக்கும் சந்தியா, இதன் பிறகு குடும்ப நன்மைகளுக்காக என்ன செய்யவேண்டும் என யோசி என்று மாமியார் சந்தியாவை திட்டுகிறார். மேலும் பிளேபாய் ஆதியும் சந்தியாவிடம் தெனாவெட்டாக பேசியதால், அவருக்கு ஒரு வலையை விரித்து வசமாக சிக்க வைக்கப் போகிறார்.

Trending News