ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வொர்க் அவுட்டானது முல்லையின் ஐடியா.. பிச்சிக்கிட்டு ஓடும் பாண்டியன் ஹோட்டல்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், ஆரம்பித்த புதிய ஹோட்டலில் லாபம் எதுவும் வராததால் அதை வைத்து முல்லையில் அக்கா மல்லி கேலி கிண்டல் செய்கிறார். இதனால் ஒரு மாதத்திற்குள் இந்த ஹோட்டலில் இருந்து லாபம் எடுக்கிறேன் என கதிர் சவால் விட்டதால் அதற்காக என்ன செய்வது என யோசிக்கின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கு காலையில் டிபனுடன் மதிய உணவும் சமைப்பது சிரமமாக இருக்கும். ஆகையால் நாம் காலையிலேயே டிபனுடன் மதிய உணவையும் சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து லாபம் வரும் என்று முல்லை கதிருக்கு யோசனை கொடுக்கிறார்.

Also Read: சரியான பிளான் போட்டு வலைவீசும் கதிர்

இதை அப்படியே கதிரும் அடுத்தநாள் செய்ததால் காலையில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் கூடவே மதிய உணவையும் வாங்கி செல்கின்றனர். இதனால் புதிதாக ஆரம்பித்த பாண்டியன் ஹோட்டலில் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் வருகிறது.

இதைப் பார்த்த முல்லையின் அக்கா மல்லியின் மூக்கு உடைபட்டது. மறுபுறம் ஐஸ்வர்யா ஆரம்பிக்கும் பியூட்டி பார்லருக்கு ‘பாண்டியின் பியூட்டி பார்லர்’ என வைப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர் ‘ஐஸ்வர்யா பியூட்டி பார்லர்’ என பெயர் சூட்டியிருக்கிறார்.

Also Read: மீனாவின் மூக்கை உடைத்த ஐஸ்வர்யா

இதைப்பற்றி மீனா கேட்டபோது பியூட்டி பார்லர்களுக்கு பெரும்பாலும் பெண்கள் தான் வருவார்கள். அப்படியிருக்கும்போது ஆண் பெயரான பாண்டியன் பெயரை வைத்தால் நன்றாக இருக்காது என்று குடும்பத்துப் பெயரையே ஐஸ்வர்யா அவமானப்படுத்துகிறார்.

இதையே காரணமாகக் காட்டி மீனா, ஐஸ்வர்யாவை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சிக்கவைத்து கும்மியடிக்கப் போகிறார். எப்படியோ முல்லை கொடுத்த ஐடியாவால் பாண்டியன் ஹோட்டல் இனி பிச்சுகிட்டு ஓடப் போகிறது.

Also Read: கையில சூடு போட்டு சுளுக்கெடுத்த விட்ட முல்லை

Trending News