மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மோகன் ஜி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தொடர்ந்து கொடுத்த வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை எழுந்த போதிலும் மக்கள் ஆதரவளித்து வந்தனர்.

தற்போது மோகன்ஜி செல்வராகவனை கதாநாயகனாக வைத்து பகாசுரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்தடுத்து மர்மமான கொலைகள் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜன் நடித்துள்ளார். இதில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சீரழிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழிக்கும் நபர்களை கொலை செய்பவராக செல்வராகவன் காட்சியளிக்கிறார். மேலும் தனி அறையில் இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை நட்டி நடராஜன் கூறியிருப்பார்.

இப்படம் கண்டிப்பாக தற்போது உள்ள பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமான படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்வராகவும் சாணி காகிதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் செல்வராகவனின் பகாசுரன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி குறிப்பிட்டு இருந்தார்.