வளர்ந்து வரும் நடிகை ஒருவர் இளம் நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை பற்றி தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சாக்லேட் பாய் போன்று இருக்கும் அந்த நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருக்கின்றனர்.
ஏகப்பட்ட சர்ச்சை மற்றும் கிசுகிசுவில் சிக்கிய அந்த நடிகர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். உருகி உருகி காதலித்த அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றனர்.
Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை
ஆனால் அதன் பிறகு தான் நடிகரின் உண்மை முகம் அந்த நடிகைக்கு தெரியவந்தது. உடனே அவரை பிரேக்கப் செய்துவிட்டு அக்கடதேசத்திற்கு பறந்து விட்டார் அந்த நாயகி. அதனால் மனம் உடைந்து போயிருந்த நடிகர் தற்போது தன்னுடன் இணைந்து நடித்த மற்றொரு நடிகையை காதல் வலையில் வீழ்த்தி விட்டாராம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை தற்போது நடிகரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாராம். நடிகையிடம் கதை சொல்ல செல்லும் இயக்குனர்கள் அவரை பார்க்க முடியாமல் திரும்பி வருகிறார்களாம்.
Also read:காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!
ஏனென்றால் நடிகை எங்கேயும் எப்போதும் அந்த நடிகருடன் தான் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறாராம். போகிற போக்கை பார்த்தால் நடிகைக்கு இனி சினிமா வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறுகின்றனர். ஏற்கனவே இப்படி ஒரு நிலைமை தான் முன்னாள் காதலிக்கும் ஏற்பட்டது.
நல்ல திறமையான நடிகை என்று பெயர் எடுத்த முன்னாள் காதலி, நடிகருடன் காதலில் விழுந்ததால் தான் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். அந்த அளவுக்கு நடிகர் தானும் வளராமல் தன்னுடன் இருப்பவர்களையும் வளர விட மாட்டார்.
இதனால் சுதாரித்த முன்னாள் காதலி எப்படியோ நடிகரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் அது தெரியாமல் நடிகருடன் காதல் மயக்கத்தில் மஜாவாக இருக்கிறார் அந்த சீரியல் நடிகை. இது எங்க போய் முடிய போகிறதோ என்று நடிகையைப் பற்றி பலரும் பரிதாபத்துடன் புலம்பி வருகின்றனர்.
Also read:காதல் தோல்வி, தற்கொலை முயற்சியில் வாரிசு நடிகை.. 37 வயதாகியும் திருமணத்தை வெறுக்கும் சோகம்