வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குடும்ப மானம் கப்பல் ஏறுதே.. கமிஷனர் ஆபீஸில் கதறி துடித்த சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமியின் இளைய மகன் ஆதி, ஜெசி என்ற பெண்ணை துரத்தி துரத்தி காதலித்து தற்போது அவரை ஏமாற்றியிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஜெசி தனக்கு நியாயம் வேண்டும் என ஆதியை நடுரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்.

அப்போது ஆதி, ‘முதலில் நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை என்னிடம் வந்து சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்னுடைய அம்மாவிடம் சமயம் பார்த்து பேசி சம்மதம் வாங்கியிருப்பேன். இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Also Read: ஹீரோவாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்

திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆனால், அவளை ஒழுக்கம் இல்லாதவள் என்று சொல்வார்கள். ஆகையால் என்னுடைய குடும்பத்தில் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என்று ஜெசியிடம் ஆதி கொஞ்சம் திமிராகவே பேசுகிறார்.

இதன்பிறகு ஜெசி, ‘எனக்கு சந்தியா நிச்சயம் உதவுவார். அவரை வைத்து உன்னை பார்த்துக் கொள்கிறேன்’ என்று அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். ஆதி தனது குடும்பத்தினரிடமே ஏமாற்றுகிறார். ஆதியை எப்படி எல்லா உண்மையையும் சொல்ல வைத்தது என்று சந்தியா யோசித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சிக்கி சின்னாபின்னமான சிவகாமியின் குடும்பம்

இதற்கிடையில்ஜெசியின் அம்மா, அப்பா இருவரும் ஜேசியை அழைத்துக்கொண்டு கமிஷனர் ஆபீஸ்க்கு செல்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியா கமிஷனர் ஆபீஸ்க்கு செல்கிறார். சீக்கிரம் தன்னுடைய குடும்பத்திற்கு ஆதியின் முகத்திரையை கிழித்து, ஜெசியை ஆதியுடன் சேர்த்துவைக்கிறேன் என்று சந்தியா, மாமியார் சிவகாமியின் குடும்ப மானம் போகக்கூடாது என்பதற்காக கமிஷனர் ஆபீஸில் கதறுகிறார்.

பின் ஜெசியின் அம்மா, அப்பா இருவரும் சந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்று போலீசாரிடம் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பிறகு சந்தியா ஆதிக்கு வேறு ஒரு பெண்ணை பார்ப்பதாக அழைத்து சென்று, அவர் வாயாலேயே குடும்பத்தினரிடம் அனைத்து உண்மையையும் கூறும்படி பிளான் போட்டு அதில் ஆதியை வசமாக மாட்டி விடப் போகிறார்.

Also Read: ஊர் முன்னாடி மருமகளிடம் அசிங்கப்பட்ட சிவகாமி

Trending News