வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். இதில் கதிர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மற்றொரு பிரச்சினை வந்திருக்கிறது.

மூர்த்தியின் கனவில் இறந்து போன அவருடைய அம்மா லட்சுமி வருகிறார். குடும்பத்திற்கு அடுத்தடுத்து பிரச்சினை வருவதால், இந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு வீட்டிற்கு குடியேறுங்கள் என்று சொல்கிறார். அப்போது திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்த மூர்த்தி உடனடியாக வேறு வீட்டிற்கு எப்படி குடி மாறுவது என குழம்புகிறார்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அவமானப்படுத்திய விஜய் படக்குழு

அந்த சமயம் வீட்டின் கூரையில் இருந்த ஓடு கீழே விழுகிறது. மிகவும் பழமையான வீடு என்பதால் அந்த வீட்டில் இனிமேல் இருந்தால் அது வீட்டில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஆபத்துதான் என்று மூர்த்தியின் அம்மா கனவில் வந்து இப்படி ஒரு முடிவை எடுக்க சொல்லி இருக்கலாம்.

ஆகையால் இதைப்பற்றி மூர்த்தி வீட்டில் இருப்பவர்களிடம் கலந்துரையாடுகிறார். அப்போது மீனாவும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. நாம் அனைவரும் வேறு ஒரு வீட்டிற்கு சென்றால், நன்றாக இருக்கும் என்று கருத்து செல்கின்றனர்.

Also Read :  மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்கு குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்

ஆனால் திடீரென்று வீட்டை காலி செய்வது எப்படி சாத்தியமாகும் என மூர்த்தி-தனம் இருவரும் தடுமாறுகின்றனர். இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என மூர்த்தி, தனது இரண்டு தம்பிகளான கண்ணன், ஜீவா இருவரிடம் யோசனை கேட்கின்றார்.

ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒரு பெரிய வீட்டை ஒத்திக்கு பார்த்துச் செல்வார்கள். சீக்கிரம் அவர்கள் சொந்த வீடு கட்டவும் ப்ளான் போட போகின்றனர். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒன்றுமில்லாத பிரச்சனையை பெரிதாக காட்டி ரசிகர்களை எரிச்சலடைய செய்கின்றனர்.

Also Read : இதுவரை சின்னத்திரையில் தற்கொலை செய்து கொண்ட பிரபலங்கள்

Trending News