இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். சொல்லப்போனால் விஜய் இந்த அளவுக்கு இன்று ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்ததற்கு காரணம் அவர்தான்.
ஆனால் அவர்கள் இருவரும் தற்போது மனக்கசப்பின் காரணமாக விலகி இருப்பது பலருக்கும் தெரியும். இது திரைத்துறையில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் கூட சில விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதை தீர்க்கும் விதமாக மாஸ்டர் பட விழாவில் அவர்கள் இருவரும் ஒன்றாக வந்திருந்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இருந்த அந்த கருத்து வேறுபாடு இன்னும் தீர்ந்த பாடில்லையாம். விஜய்யின் மீது தீராத கோபத்தில் இருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் அவரை எப்படியெல்லாம் பழிவாங்கலாம் என்று திட்டம் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன் முதல் கட்டமாக தான் அவர் தன்னுடைய பிறந்த நாளின் போது நடந்த சதாபிஷேக விழாவில் தன் மனைவியுடன் தனியாக கலந்து கொண்டாராம். வேண்டுமென்றேதான் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அந்த விழாவை நடத்தி போட்டோக்களையும் வெளியிட்டாராம்.
இதன் மூலம் தாய், தந்தையரை விஜய் தனியாக தவிக்கவிட்டு விட்டார் என்ற எண்ணத்தை ரசிகர்கள் முன்னிலையில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய்யின் மீது பல விமர்சனங்கள் அப்போது எழுந்தது.
ஆனால் அதற்கு பதிலளித்த சந்திரசேகர் விஜய் வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் தான் அவர் வரவில்லை என்று சமாளிப்பாக பதில் கூறினார். இருப்பினும் அவருக்கு விஜயின் மீது இருந்த கோபம் இதன் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டதாகவே பலரும் கூறுகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை குறித்த பிரச்சினை தான் இதற்கெல்லாம் காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும் இந்த பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.