10 வித்தியாசமான கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அஜய் ஞானமுத்து இயக்கி, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கோப்ரா படத்தில் இசையமைத்துள்ளார். 90 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு சீயான் விக்ரம் 20 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். மேலும் கோப்ரா படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.
Also Read: கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் விக்ரம்
எனவே உலகநாயகனின் விக்ரம் படத்திற்கு பிறகு கோப்ரா கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இதுவரை ஒட்டுமொத்தமாக 1.7 கோடி ரூபாய் வரை டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கின்றனர். மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மூன்று மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தை உலகளவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்கிரீனிங்களில் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
Also Read: ஏஆர் ரஹ்மானால் வருத்தத்தில் இருக்கும் விக்ரம்
அத்துடன் நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையும் அதிகமாகவே இருக்கப்போகிறது. சியான் விக்ரமின் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் கோப்ரா படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 15 முதல் 20 கோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவில் வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த 5 நாட்கள் எந்தவித போட்டியும் இல்லாமல் முதல் வாரத்திலேயே சியான் விக்ரமின் கோப்ரா 100 கோடி வரை வசூல் ஆகும் என கணிக்கப்படுகிறது. இதன் பிறகு விக்ரம் நடித்திருக்கும் பொன்னின் செல்வன் திரைப்படங்கள் அடுத்த மாதம் ரிலீஸ் ஆவதால், இந்த 2 படங்களின் மூலம் விக்ரம் தனது மார்க்கெட்டை எகிற விடப்போகிறார்.
Also Read: கோப்ரா படத்திற்கு கெடு வைத்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ்