160 கோடி பட்ஜெட் லைகர் தோல்விக்கு இவர்தான் முக்கிய காரணம்.. கழுவி ஊற்றிய தியேட்டர் ஓனர்

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசான லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விஜய் தேவரகொண்டாவின் ஓவர் திமிருதான். ஏனென்றால் லைகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நெட்டிசன்கள் சமீபகாலமாக அமீர்கான், டாப்ஸி, அக்ஷய்குமார் உள்ளிட்டோரின் படங்களை பாய்காட் செய்து வருகின்றனர் என்ற கருத்துக்கு, விஜய் தேவர்கொண்டா, அதை குறித்து மிகவும் காட்டமாக பதிலளித்தார்.

அந்த சமயம் நெட்டிசன்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இதன் காரணமாகவே லைகர் படத்தையும் நெட்டிசன்கள் பாய்காட் செய்யத் தொடங்கினர். இதனால் படம் ரிலீசுக்கு முன்பே லைகர் படத்தை குறித்த நெகட்டிவ் கமெண்ட்டுகள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தது.

அதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற விஜய் தேவரகொண்டா யாரையும் சந்திக்க விரும்பவில்லை. சுமார் 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் படம் 46 கோடி தான் வசூல் ஆனது. இந்தப் படத்தின் தோல்விக்கு முழு காரணம் விஜய் தேவர்கொண்டாவின் திமிரான பேச்சு தான் என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஓனர் மனோஜ் தேசாய் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா தன்னை புத்திசாலி என நினைத்துக்கொண்டு பேசிய பேச்சால் தற்போது லைகர் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இவ்வளவு திமிருத்தனமாக நடந்து கொள்வதாக இருந்தால், ஓடிடி தளங்கள் தயாரிக்கும் படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து விடலாம்.

இப்படி திரையரங்குகளின் வருமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்த கூடாது என்று தியேட்டர் ஓனர் விஜய் தேவரகொண்டாவை கழுவி கழுவி ஊற்றுகிறார். இவர் மட்டுமல்ல லைகர் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டதால் இதற்கு காரணமான விஜய் தேவர்கொண்டாவின் ஆணவ பேச்சை குறித்து பலரும் விமர்சிக்கின்றனர்.